நடிகர் விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து தற்போது அட்லீயுடன் இணைந்துள்ளார். மெர்சல், தெறி படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக அட்லீயின் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மேலும், விவேக், யோகி பாபு உள்ளிட்டோரும் நடக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்று சில தகவள்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்க : விஜய் 63 படத்தில் இணைந்த கதிர்..!
இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 100 கோடி ரூபாயை நெருங்கும் என்று கூறப்படுகிறது.மேலும், இயக்குனர் அட்லீ ஏற்கனேவே தெறி மற்றும் மெர்சல் படத்தில் எமி ஜாக்சன் மற்றும் வடிவேலுக்கு தேவைல்லாமல் பல கோடியை விரயம் செய்ததால். இந்த படத்தில் ஏ ஜி எஸ் நிறுவனம் அட்லீக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதில் முக்கிய ஒன்றாக இந்த படத்தில் அட்லீ கூறிய பட்ஜெட்டை விட கூடுதலாக ஆகும் செலவை அட்லீயின் சம்பளத்தில் இருந்து தான் பிடிக்கபடும் என்று கறாராக ஒப்பந்தம் செய்துள்ளது ஏ ஜி எஸ் நிறுவனம் அதற்கு கையெழுத்து போட்டே இயக்குனர் அட்லீ இந்த படத்தில் சம்மதித்துள்ளாராம்.எனவே, தெறி மற்றும் மெர்சலை விட இந்த படத்தின் பட்ஜெட் குறைவாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.