கலைஞர்100 விழாவில் இரட்டை இலைக்கு வாக்களித்த கதையை தைரியமாக சொன்ன ரஜினி. இதோ வீடியோ

0
571
- Advertisement -

கலைஞர் கருணாநிதி என்ற பெயரை கேட்காத நபர்கள் தமிழ் நாட்டில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர் அரசியலிலும் சரி சினிமாத்துறையிலும் சரி அவர் ஆற்றிய பங்கு மிகப்பெரியது. நேற்று கலைஞரின் நூற்றாண்டு விழா நடைபெற்று இருக்கிறது. இந்த விழா சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது. இந்த விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின், ரஜினி, கமல், சூர்யா, விஜய், தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன், இசைஞானி இளையராஜா உட்பட திரை பிரபலங்கள் பலர் பங்கேற்று இருக்கின்றார்கள். இதோ வீடியோ

-விளம்பரம்-

மேலும், இந்த விழாவை மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவாக திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா கடந்த மாதமே நடைபெறுவதாக தான் இருந்தது. ஆனால், மிக்ஸாம் புயல் மற்றும் கனமழையால் தான் இந்த நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டது. தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் விதமாக இந்த விழாவை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கொண்டாடுகிறார்கள். நேற்று மாலை 4:00 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கயிருக்கிறது.

- Advertisement -

விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்:

இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கருணாநிதி குறித்து கூறியிருப்பது, கருணாநிதி பற்றி பேச ஆரம்பித்தால் எங்க தொடங்கி எங்கு முடிப்பது என்று எனக்கு தெரியவில்லை. அந்த அளவுக்கு அவரால் நான் ஈர்க்கப்பட்டு இருக்கிறேன். சிவாஜியை ஒரு படத்தில் ஸ்டார் ஆக்கியவர். சாதாரண நடிகராக இருந்த எம் ஜி ஆர் வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் கருணாநிதி தான். அவர் அரசியலுக்கு செல்லாமல் சினிமாவிலேயே இருந்திருந்தால் எத்தனையோ சிவாஜி, எம்ஜிஆர் எல்லாம் உருவாக்கி இருப்பார்.

கருணாநிதி குறித்து சொன்னது:

அதோடு ஒருவர் எழுத்தாற்றல் இருந்தால் பேச்சாற்றல் இருக்காது. ஆனால், இரண்டிலுமே கருணாநிதி சிறந்து விளங்கி இருந்தார். அவருடைய தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதிய கடிதங்களை படித்தால் கண்களில் கண்ணீர் வரும், சில பேருக்கு அவர் எழுதிய கடிதம் மூலம் நெருப்பு உருவாகும். அதுமட்டும் இல்லாமல் சில பேர் தன்னுடைய அறிவை காட்டுவதற்காக தான் பேசுவார்கள். அது மற்றவர்களுக்கு புரிகிறதா? என்று கூட யோசிக்க மாட்டார்கள். ஆனால், கருணாநிதி அவர்கள் அறிஞர் சபையில் அறிஞராகவும், கவிஞர் சபையில் கவிஞராகவும், பாமரனுக்கு பாமரனாகவும் பேசக்கூடியவர்.

-விளம்பரம்-

கருணாநிதி திறமை:

உதாரணத்திற்கு, என்னுடைய படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதுகிறார் என்று சொன்னதுமே அந்த படத்தில் நடிக்கவில்லை என்று அவரிடம் சொல்வதற்காக சென்றேன். காரணம், எனக்கு அப்போது தமிழ் பெரிதாக வராது. இதனால் இதைப்பற்றி அவரிடம் நான் சொன்னேன். அவர் உடனே, சிவாஜிக்கு ஏற்ற மாதிரி வசனம் எழுதுவேன். யார் நடிக்கிறார்களோ? அவர்களுக்கு ஏற்ற மாதிரி வசனம் எழுதுவேன் என்று சொன்னார். ஒரு முறை, அது தேர்தல் நேரம். ஒரு நடிகர் ஓட்டு போட்டு விட்டு வெளியே வந்த போது பத்திரிக்கையாளர்கள் அவரிடம் யாருக்கு ஓட்டு போட்டீர்கள்? என்று கேட்டார்கள். இரட்டை இலைக்கு என்று அந்த நடிகர் சொன்னது அப்போது ட்ரெண்டிங் ஆகிவிட்டது.

வாழ்வில் நடந்த அனுபவம்:

அன்று மாலை அந்த நடிகர் கருணாநிதி உடன் சேர்ந்து படம் பார்க்க வேண்டும்.எப்படி செல்வது என்று தெரியாமல் குளிர் காய்ச்சல் என்று சொல்லிவிட்டார் அந்த நடிகர். ஆனால், அவர் வரவேண்டும் என்று கருணாநிதி சொல்லிவிட்டார். தியேட்டருக்கு சென்றபோது கருணாநிதி, வாங்க காய்ச்சல்ன்னு சொன்னீங்களாமே? சூரியன் பக்கத்துல உட்காருங்க என்று சொன்னார். அந்த நடிகர் யாருமில்லை நான் தான். உங்களுக்கு ஆண்டவனை பிடிக்காது. ஆனால், ஆண்டவனுக்கே உங்களை பிடிக்கும் என்று அவரிடம் நான் சொன்னேன். முதல்வர் ஸ்டாலின் தான் அவருடைய அப்பா பெயரை காப்பாற்ற வேண்டும், காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement