கலைஞர்100 மேடையில் முன்னாள் மாமனார் படம் குறித்து பேசிய தனுஷ் – ரஜினியின் Reaction இதோ.

0
169
- Advertisement -

கருணாநிதி குறித்து கலைஞரின் நூற்றாண்டு விழாவில் எந்திரன் படம் குறித்து தனுஷ் கூறியதற்கு ரஜினி கொடுத்திருக்கோம் ரியாக்ஷன் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த கலைஞரின் நூற்றாண்டு விழா நேற்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டிருக்கிறது. கலைஞர் கருணாநிதி என்ற பெயரை கேட்காத நபர்கள் தமிழ் நாட்டில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அரசியலிலும் சரி சினிமாத்துறையிலும் சரி அவர் ஆற்றிய பங்கு மிகப்பெரியது.

-விளம்பரம்-

மேலும், நேற்று கலைஞரின் நூற்றாண்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவை மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவாக திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா கடந்த மாதமே நடைபெறுவதாக தான் இருந்தது. ஆனால், மிக்ஸாம் புயல் மற்றும் கனமழையால் தான் இந்த நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டது. தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் விதமாக இந்த விழாவை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கொண்டாடுகிறார்கள்.

- Advertisement -

கலைஞரின் நூற்றாண்டு விழா:

மேலும், இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டிருக்கிறார். இவருடன் இந்த விழாவில் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன், இசைஞானி இளையராஜா உட்பட திரை பிரபலங்கள் பலர் பங்கேற்று இருக்கின்றார்கள். இந்நிலையில் விழாவில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், கலைஞர் அவர்கள் அரசியல் மற்றும் சினிமாவில் அவர் செய்த சாதனைகளைப் பற்றி பேச எனக்கு வயதோ, அனுபவமோ கிடையாது.

விழாவில் தனுஷ் பேசியது :

ஒரு முறை படத்தினுடைய பூஜைக்காக பத்திரிக்கை வைக்க நான் கலைஞர் வீட்டுக்கு போயிருந்தேன். வாங்க மன்மத ராசா என்று அவர் என்னை கூப்பிட்டார். இவர் நம்ம பாட்டை கேட்டிருக்கிறார் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்தப் பத்திரிகையில் நான் இரண்டு கெட்டப்பில் இருந்தேன். அதைப் பார்த்து அவர், இரட்டை வேஷமா? என்று கேட்டார். இல்லை சார் என்று சொன்னேன். அப்ப கிராமத்திலிருந்து கிளம்பி வந்து இப்படி ஆகிற என்று படத்தோட ஒட்டுமொத்த கதையும் சொல்லிட்டார்.

-விளம்பரம்-

கருணாநிதி குறித்து சொன்னது :

ஆமா சார், நீங்க சொன்னது தான் கதை என்று நான் சொல்லி விட்டு வந்தேன். அந்த அளவிற்கு கதை சொல்லாமல் அனைத்தும் புரிந்து கொள்ளக்கூடியவர். மேலும், எங்கே அவர் என்னை பார்த்தாலும் என்னுடைய கன்னத்தை வருடி எப்படி இருக்க? என்று கேட்பார். அவருக்கு ஹியூமர் சென்ஸ் அதிகம். அவர் எந்திரன் படம் பார்க்கும்போது அவருக்கு பின்னாடி உட்கார்ந்து படம் பார்க்கிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் படத்தை ரசிக்கிறதை நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். எந்திரன் படத்தில் கெட்ட சிட்டி ரோபோ வரும்போது கருணாநிதி அவர்கள் கைதட்டி ரஜினியை திரும்பி பார்த்தார். அவருடைய சின்ன சின்ன ரியாக்சன் எல்லாம் நன்றாக இருக்கும்.

https://twitter.com/RajiniTrendPage/status/1743681541757423950/video/1

ஸ்டாலின் குறித்து சொன்னது;

அதோடு ஒரு சிலரோட மறைவு நம்மால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது, உண்மை என்றும் தோணாது. அதே மாதிரி தான் கலைஞர் இறந்துட்டார் என்று சொன்னதும் என்னுடைய நினைவுக்கு வருவது அவர் இப்பவும் நம்முடன் இருந்து கொண்டு இருக்கிற மாதிரியே இருக்கு. முதல்வர் வானத்தில் எட்ட முடியாத நட்சத்திரமாக இருக்கணும்னு இல்லாம ரொம்ப எளிமையா நம்மளோட இருக்கிற மாதிரி எளிமையான முதல்வரா ஸ்டாலின் இருக்கிறார். அவர் அசுரன் படம் பார்த்துவிட்டு போன் பண்ணி, தனுஷ் பிரதர் ஸ்டாலின் பேசுகிறேன் என்று சொன்னார். அவர் என்னை பிரதர் என்று கூப்பிட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்று பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இப்படி தனுஷ் எந்திரன் படம் குறித்து பேசும் போது தலைவர் ரஜினி கொடுத்திருக்கும் ரியாக்ஷன் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement