‘Feel Feel சொல்றாரு, என்ன Feel நமக்கு தெரிஞ்சதெல்லாம் உட்றா வண்டிய தான் ‘ – தளபதி ஷூட்டிங் அனுவபங்களை சொன்ன ரஜினி.

0
377
rajini
- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் மணிரத்தினம். இவரின் நீண்ட நாள் கனவுப்படமே ‘பொன்னியின் செல்வன்’.` பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதை தற்போது திரைப்படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இதை படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது.மீபத்தில் தான் பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்கள் வெளியாகி இருந்தது. மேலும், சில தினங்களுக்கு முன் தான் பிரம்மாண்டமாக படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து முடிந்தது. இதில் ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட பலரும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்கள்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் குறித்து ரஜினி :

இந்த நிலையில் விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கூறியிருந்தது, எனக்கு நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால், நான் பக்க எண்கள் பார்த்து தான் படிக்க தொடங்குவேன். 200 – 300 வரை இருந்தால் சரி என்று படிப்பேன். ஆனால், 500க்கு மேலே போனால் அதை வாசிக்கவே மாட்டேன். பொன்னியின் செல்வன் மொத்தமாக ஐந்து பாகமும் 2000 பக்கம் என்று கூறினார்கள்.அட போங்கடா என்று சொல்லிவிட்டேன்.

வந்திய தேவனாக ரஜினி :

அப்போது ஒரு பத்திரிக்கைக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த பேட்டியில் பொன்னியின் செல்வன் கதையில் வந்தியதேவன் கதாபாத்திரத்திற்கு யார் சரியாக இருப்பார்? என்று கேட்டதற்கு ரஜினி சரியாக இருப்பார் என்று சொன்னார். அப்போதே பொன்னியின் செல்வன் கதையை படிக்கணும் என்று முடிவு செய்தேன். அந்த நாவலை படிக்க படிக்க அவ்வளோ அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக கல்கி வடிவமைத்து இருந்தார். மேலும், நாவலை வாசிக்கும் போதே என்னை நான் வந்திய தேவனாகவும், கமலை அருள்மொழி வர்மனாகவும், ஆதித்ய கரிகாலன் விஜயகாந்த் ஆகவும், பெரிய பழுவேட்டையர் ஆக சத்தியராஜையும் கற்பனை செய்து படித்தேன் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

தளபதி ஷூட்டிங் அனுபவம் :

மேலும் தளபதி படத்தின் போது நடைபெற்ற சம்பவம் ஒன்றை பற்றி பேசிய ரஜினிகாந்த் மணிரத்தினம் படத்தில் அதிக முறை டேட் சென்று கொண்டே இருந்தது. நாம் எப்போதும் ஒரு நிரந்தரமான எக்ஸ்பிரஷன் வைத்திருப்போம். காதலுக்கு, ஆச்சரியத்திற்கு சந்தேகத்திற்கு என்று அனைத்திற்கும் ஒரு ஸ்டாக் எக்ஸ்பிரஷன் இருக்கும். ஆனால், அதையெல்லாம் கொடுத்தால் ஒத்துக் கொள்ள மாட்டார். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. எந்த வசனம் பேசினாலும் ஓகே ஆகாமல் இருந்தது. எதற்கெடுத்தாலும் பீல் பீல் என்று சொன்னா.ர் நம்ம கதையெல்லாம் ‘எட்றா வண்டிய’ என்பதுதான். ஆனால், இவர் பீல் பீல் என்று சொன்னார்.

கமலுக்கு போன் செய்த ரஜினி :

அதன் பின்னர் என்ன பண்ணுவது என்று தெரியாமல் கமலுக்கு போன் செய்தேன். கமல், ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. ஒரு ஷாட் 10 டேக் 12 டேக் போகிறது என்ன பண்றது என்று தெரியவில்லை என்று கமலிடம் கேட்டபோது எனக்கு தெரியும் ரொம்பவும் கஷ்டம் நானும் இப்படித்தான் கஷ்டப்பட்டேன் ஒரு ஐடியா சொல்கிறேன். அவர் ரொம்ப ஏதாவது செய்தால், மணி நீங்கள் நடித்துக் காட்டுங்கள் என்று கேளுங்கள். அவர் நடித்துக் காட்டுவார்.

கமல் சொன்ன ஐடியா :

அதை நீங்கள் உள்ளே எடுத்துக் கொண்டது போல எடுத்துக் கொண்டு நாளு முறை வாக் செய்து கொஞ்சம் யோசனை செய்வது போல செய்து ஓகே என்று அவரிடம் சொல்லுங்கள் என்று சொன்னார். நானும் அவர் நடித்துக் காண்பித்தததுடன் மிகவும் சீரியஸாக தம்மெல்லாம் அடித்து விட்டு ஓகே சார் என்று சொல்லிவிட்டு நடித்துக் காட்டியதுடன், ஓகே சார் என்று மணிசாரம் சொல்லிவிட்டார். இப்படி நாங்கள் இரண்டு பேரும் மணி சாரை ஏமாற்றி இருக்கிறோம் என்று பேசி இருக்கிறார்.. ரஜினியின் இந்த வீடியோ சமுக வலைதளத்தில் வைரலாக பரவ பொன்னியின் செல்வன் விழாவில் மொத்த கவனத்தையம் ரஜினி ஒரே ஆள் ஈர்த்துவிட்டார் என்று கூறி வருகின்றனர்.

Advertisement