சீரியலில் நடிக்க வரும் அஜித் பட இயக்குனர் – அஜித் பட இயக்குநருக்கா இந்த கதி.

0
436
mandirapunnagai
- Advertisement -

அஜித் பட இயக்குனர் சின்னத்திரை சீரியலில் களமிறங்கியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் அஜித் நடிப்பில் இயக்குனர் சரவணா சுப்பையா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சிட்டிசன். இந்த படத்தை எஸ் எஸ் சக்கரவர்த்தி தயாரித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் அஜித்குமார் உடன் வசுந்தரா தாஸ், மீனா, நக்மா, மணிவண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவுகில் அறிமுகமானவர் சரவணா சுப்பையா. இதனைத் தொடர்ந்து இவர் சில படங்களை இயக்கியிருந்தார். இருந்தாலும், பெரிய அளவில் வெற்றி அடைய வில்லை.

- Advertisement -

சரவணா சுப்பையா குறித்த தகவல்:

இதனை அடுத்து சரவணா சுப்பையா அவர்கள் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அதிலும் விசாரணை திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக சரவணா சுப்பையா நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் சரவணா சுப்பையா அவர்கள் ரசிகர்களின் கவனத்தை வைத்திருந்தார். அதற்கு பின்பு இவர் கோலி சோடா 2 என்ற படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். இப்படி பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் மிரட்டி இருக்கிறார் சரவணன் சுப்பையா.

சரவணா சுப்பையா நடிக்கும் சேனல்:

இந்நிலையில் தற்போது சரவணா சுப்பையா சின்னத்திரை சீரியல் நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே திரைத்துறையில் இருக்கும் இயக்குனர்கள் பலரும் நடிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும், சிலர் வெள்ளி திரை, சின்னத்திரை என இரண்டிலுமே நடிப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. அந்த வகையில் தற்போது இயக்குனர், நடிகருமான சரவணா சுப்பையா அவர்கள் கலர்ஸ் தமிழ் சீரியலில் நடிக்க இருக்கிறார்.

-விளம்பரம்-

மந்திர புன்னகை தொடர்:

அதாவது, கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் மந்திர புன்னகை. இந்த தொடரில் மெர்ஷீனா நீனு , உசைன் அஹமத், நியாஸ் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தொடரில் தனது தங்கைக்காக காதலுடன் களத்தில் இறங்கினார் ஹீரோயினி. கடைசியில் அவருடைய தங்கை கிடைத்தாரா? குரு- கதிர் ஒன்றாக சேர்ந்தார்களா? என்பது தான் இந்த சீரியலின் கதை.

சீரியலில் நடிக்கும் சரவணா சுப்பையா:

இந்த தொடர் 150 எபிசோடுகளாக மட்டும் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரில் சரவணா சுப்பையா அவர்கள் டிடெக்டிவ் ரோலில் ராகவன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement