காலையில் மகளுடன் திருப்பதி, மலையில் ரகுமானுடன் தர்காவில் – இணையத்தில் வைரலாகும் ரஜினியின் வீடியோ.

0
379
rajini
- Advertisement -

திருப்பதி முதல் தர்காவிற்கு சென்று ரஜினிகாந்த் பிரார்த்தனை செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. இந்திய சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி என பலர் இந்த படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படம் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. மேலும், டிசம்பர் 12-ம் தேதி ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். ஜெயிலர் படத்தின் டீசரும் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் பலரும் ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடி இருந்தார்கள்.

ரஜினி பிறந்தநாள் வாழ்த்து:

சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலருமே தங்களுடைய வாழ்த்துக்களை ரஜினிக்கு தெரிவித்து இருந்தார்கள். இதனை அடுத்து நடிகர் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். அங்கு அவருக்கு தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்த பிறகு ரஜினிகாந்த் அவர்கள் கடப்பாவுக்கு சென்றிருக்கிறார்.

சாமி தரிசனம்:

அங்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுடன் அமீன் பீர் தர்காவுக்கு சென்று ரஜினிகாந்த் பிரார்த்தனை செய்திருக்கிறார். அங்கேயும் ரஜினிகாந்துக்கு உற்சாகத்துடன் வரவேற்பு கொடுத்து மரியாதை செலுத்துகிறார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து காலையில் மாணிக்கம், மதியம் பாட்ஷா என்றெல்லாம் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement