மது அருந்தும்போது உருவான நட்பு, ரஜினியைக் கடுமையாக கண்டித்த செந்தாமரை – மனைவி பகிர்ந்த சுவாரசியத் தகவல்

0
1132
- Advertisement -

மறைந்த நடிகர் செந்தாமரைக்கும்- ரஜினிக்கும் இடையே இருக்கும் நட்பு குறித்து நடிகை கௌசல்யா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் செந்தாமரை. இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர். இவர் முதலில் சிவாஜிகணேசன் மற்றும் எம்ஜிஆர் ஆகியோருடன் இணைந்து பல மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். அதற்கு பிறகு தான் படங்களில் நடிக்க தொடங்கினார்.

-விளம்பரம்-

மேலும், செந்தாமரை அவர்கள் என்பது காலத்தில் முக்கிய வில்லனாக படங்களில் மிரட்டி இருந்தார். இவரை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. நடிகர் செந்தாமரையின் வசனமும், முகபாவனையும் அப்படியே வில்லன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கும். பெரும்பாலும் இவர் படங்களில் வில்லனாக தான் மிரட்டி இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

- Advertisement -

செந்தாமரை திரைப்பயணம்:

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இவர் சினிமா உலகில் பயணித்திருக்கிறார். இதுவரை இவர் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதிலும், இவர் நடிப்பில் வெளிவந்த மலையூர் மம்முட்டியான்,, மூன்று முகம் தம்பிக்கு எந்த ஊரு, தூறல் நின்னு போச்சு, தனிக்காட்டுராஜா, குரு சிஷ்யன், எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இவர் கடைசியாக துருவ நட்சத்திரம் என்ற படத்தில் தான் நடித்திருந்தார்.

செந்தாமரை மனைவி:

இப்படி பிரபலமாக திகழ்ந்த செந்தாமரை அவர்கள் நாடகம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மாரடைப்பு காரணமாக தன்னுடைய 57 வயதில் இறந்து விட்டார். இவருடைய இறப்பிற்கு திரை பிரபலங்கள் பலருமே இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். இதற்கிடையில் இவர் கௌசல்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரும் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். பின் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

கௌசல்யா செந்தாமரை அளித்த பேட்டி:

அதிலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சமீபத்தில் நிறைவடைந்த பூவே பூச்சூடவா என்ற தொடரில் பாட்டி என்ற கதாபாத்திரத்தில் கலக்கி இருந்தார் கௌசல்யா இவர் தான் மறைந்த நடிகர் செந்தாமரையின் மனைவி என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை கௌசல்யா செந்தாமரை பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் செந்தாமரை- ரஜினிகாந்த்துக்கு இடையே இருந்த நட்பு குறித்து கூறியிருந்தது, இவர்கள் இருவருக்கும் மது அருந்தும் போதுதான் நட்பு தொடங்கியது.

ரஜினி குறித்து சொன்னது:

அதன் பிறகு இருவரும் நல்ல நண்பர்களாக ஆனார்கள். என்னுடைய கணவர் வீடு வாங்கும்போது பல பிரச்சினைகளால் மிகவும் அவஸ்தை பட்டிருந்தார். அப்போது ரஜினிகாந்த் தான் 25,000 அளித்து உதவி செய்திருந்தார். அது மட்டும் இல்லாமல் குடும்ப பிரச்சினை ஒன்றின் போது ரஜினிகாந்தை செந்தாமரை கடுமையாக கண்டித்திருந்தார். ரஜினிகாந்தையே தைரியமாக செந்தாமரை கண்டிப்பதை பார்த்து இயக்குனர் எஸ் பி முத்து ராமன் ஆச்சரியப்பட்டார் என்று பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement