4 ஆண்டுக்கு முன் முன்னாள் கணவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து சமந்தா போட்ட கமன்ட்.

0
888
- Advertisement -

பிரிவிற்குப் பிறகு நாக சைதன்யாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமந்தா சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் படு ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இந்தியாவின் பல மொழி படங்களில் நடிகை சமந்தா நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

இதனிடையே சமந்தா அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா -நாகா சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

சமந்தா-நாக சைதன்யா பிரிவு:

மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், கருத்துக்களும் எழுந்த வண்ணம் இருந்தது. அதோடு பிரிவிற்கு பின் இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் புஷ்பா படத்தில் “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார் சமந்தா. அதை தொடர்ந்து சமந்தா பல படங்களில் நடித்து இருந்தார். சமீபத்தில் வெளியான யசோதா திரைப்படத்தில் சமந்தா நடித்து இருந்தார்.

சாகுந்தலம் படம்:

தற்போது நடிகை சமந்தா சாகுந்தலம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை குணசேகரன் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் மோகன் பாபு, கௌதமி, அதிதி பாலன், அனன்யா நகல்லா, பிரகாஷ்ராஜ், மதுபாலா நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரொமோஷன் பணிகளில் சமந்தா ஈடுபட்டு

-விளம்பரம்-

வருகிறார்.

சமந்தா பதிவிட்ட பதிவு:

இந்த நிலையில் தன்னுடைய முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் எடுத்த புகைப்படத்தை சமந்தா சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அதாவது, சமந்தா- நாக சைதன்யா இருவரும் சேர்ந்து மூன்று படங்களில் நடித்திருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் மஜ்லி. கடைசியாக இருவரும் இணைந்து நடித்த படம் இது தான். இந்த படம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகியிருந்தது.

வைரலாகும் புகைப்படம்:

இந்த படம் வெளியாகி நான்கு ஆண்டுகளை நிறைவடைந்து இருக்கிறது. இதை கொண்டாடும் விதமாக சமந்தா அவர்கள் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். அதில் நாக சைத்தன்யாவும் உடன் இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் மஜிலி படத்தின் இயக்குனர் சிவாவும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். பிரிந்தாலும் இருவருக்கு மத்தியிலும் புரிதல் இருந்து கொண்டிருக்கின்றது என்று நெட்டிசன்கள் பலரும் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement