மீண்டும் ஒரு வாய்ப்பு கேக்கும் ரஜினி மகள் – மறுபடியுமா என்று குழப்பத்தில் ரஜினி.

0
3866
rajini
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் தான். உலகம் முழுவதும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படை உள்ளது. கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இதனையடுத்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து வரும் நிலையில் இந்த படத்தை தீபாவளியன்று திரையரங்கில் வெளியிடப்படுவதாக இருப்பதாக திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்தின் அடுத்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதையும் பாருங்க : சித்து – ஸ்ரேயா வழியில், சீரியல் நடிகையுடன் காதல், நிச்சயம் முடித்த திருமணம் சீரியல் நடிகர்.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் லைகா நிறுவனத்திற்காக ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும், சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மீண்டும் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்தன. இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் அவர்கள் தனுஷ் இயக்கவிருக்கும் படத்தில் நடிப்பதாகவும் அந்த படத்தை ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Kochadaiyaan teaser out, fans celebrate their much-loved 'Superstar' in his  new avatar - Featured News

மேலும், இந்த படம் ரஜினியின் 170 ஆவது படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே சௌந்தர்யா இயக்கத்தில் நடிகர் ரஜினி ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தில் நடித்திருந்தார் ஆனால் இந்த திரைப்படம் மாபெரும் தோல்விப் படமாக அமைந்தது இதனால் மீண்டும் தன் மகளுடன் இணைந்து பணியாற்ற ரஜினி கொஞ்சம் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement