சென்னை திரும்பிய ரஜினி : யோகி காலில் விழுந்தது குறித்து கேட்ட பத்திரிகையாளர் ? ரஜினி கூறிய பதில். இதோ வீடியோ.

0
1260
Rajini
- Advertisement -

யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தது குறித்த கேள்விக்கு ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார். அண்ணத்த படத்தின் படு தோல்வியை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியாகிய ஜெயிலர் திரைப்படம் ரஜினிக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்துள்ளது. இந்த படம் 500 கோடி வசூலை நெருங்கி கொண்டு இருக்கிறது. இதனால் ஜெயிலர் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது. அதோடு படம் வெளியான உடனே ரஜினி அவர்கள் இமயமலைக்கு சென்று விட்டார்.

-விளம்பரம்-

அங்கு அவர் ஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு சென்று இருக்கிறார். பின் ரஜினிகாந்த் அங்கு மாநில ஆளுநரை சந்தித்து பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து ஆசிரமத்திற்கு சென்று இருந்தார். ஆசிரமத்தில் குருவிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோ சென்றிருந்தார். அப்போது ரஜினிகாந்தை பார்த்த செய்தியாளர்கள் பேட்டி எடுத்துஎடுத்தனர்.

- Advertisement -

அப்போது பேசிய ரஜினிகாந்த், உத்தர பிரதேச மாநிலம் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து ஜெயிலர் படம் பார்க்க இருக்கிறேன். ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு காரணம் கடவுளின் ஆசிர்வாதம் என்று பேசி இருந்தார். ஆனால், ஜெயிலர் படத்தை பார்த்த ஆதி ஆதித்யநாத் வரவில்லை. இருப்பினும் உ.பி துணை முதல்வருடன் படம் பார்த்தார் ரஜினி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.

அப்போது மரியாதை நிமிர்த்தமாக அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வர ரசிகர்கள் பலரும் பல விதமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலர் யோகி ஒரு ஆன்மீக வாதி அதனால் தான் ரஜினி அவரது காலில் விழுந்தார் அதில் என்ன தவறு என்று கூறி வந்தனர். மேலும், சிலரோ ரஜினிக்கு வயது 72, யோகிக்கு வயது 51 தான். இப்படி வயதில் சிறியவர் காலில் விழலாமா என்று விமர்சித்து வந்தனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் நேற்று தன்னுடைய ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து இருந்தார் அப்போது செய்தியாளர் ஒருவர் உத்தர பிரதேசத்தில் பயணித்தபோது அந்த மாநிலத்தின் முதலைச்சர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ரஜினி “நட்பு ரீதியான சந்திப்பே தவிர வேறு ஒன்றும் அதில் கிடையாது. ச

ந்நியாசி ஆகட்டும், யோகிகள் ஆகட்டும் அவர்கள் காலில் விழுவது என்னுடைய பழக்கம். நான் அதை தான் செய்தேன்’ என்று கூறியிருந்தார். மேலும் பேசிய ரஜினி ‘”நான்கு வருடங்கள் கழித்து இமயமலை சென்றுவந்தது மகிழ்ச்சியாக உள்ளது. பயணம் மிக நன்றாக அமைந்தது. ஜெயிலர் படத்தை வெற்றி படமாக்கிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தயாரிப்பாளர், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகிய படக்குழுவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்றும் கூறி இருந்தார்.

Advertisement