அட, எந்திரன் படத்தில் இது கிராபிக்ஸ் கிடையாதா ? உண்மையில் இது ரஜினி தானாம் இதோ unseeen புகைப்படம்.

0
25943
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த படம் எந்திரன். இந்த படத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை கொண்டது. ஒரு ரோபோட்டின் வாழ்க்கை குறித்து எடுக்கப்பட்ட கதை தான் எந்திரன். இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் இயந்திரமாகவும், மனிதன் கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்த திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதோடு படம் ஹாலிவுட் ஸ்டைலில் இருந்தது.

-விளம்பரம்-
Unseen images of Rajini from Shankar’s Enthiran releases

குறிப்பாக படத்தின் க்ராபிக்ஸ் காட்சிகளை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்நிலையில் 12 வருடங்களுக்குப் பிறகு ரஜினிகாந்தின் எந்திரன் படம் குறித்த ஒரு ரகசியம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இது குறித்து ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். எந்திரன் படத்திற்காக போட்டோஷூட் நடத்தியது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

இது குறித்த அவர் கூறியது, இந்த புகைப்படங்கள் நான் 2008-ல் நடந்த எந்திரன் போட்டோஷூட்டில் எடுத்தவை. இதை மக்கள் க்ராபிக்ஸ் என்று தான் நினைத்தார்கள். ஆனால், இது உண்மையாகவே எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இந்த போட்டோ ஷூட்டுக்காக ரஜினி சார் ரொம்பவே கஷ்டப்பட்டார். உண்மையில் ரஜினி மீது paint பூசப்பட்டு எடுத்த ஸ்டில் என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்து உள்ளார்கள்.

தற்போது ரஜினிகாந்த் அவர்கள் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா நடிக்கிறார்கள். இவர்களுடன் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement