தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி – ரஜினி பதிவு.

0
1498
Modi
- Advertisement -

புதிய பாராளுமன்ற திறப்பு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்ததற்கு நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திறக்கப்பட இருந்த புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறந்து வைத்திருக்கிறார். இந்தியாவின் புதிய நாடாளுமன்றம் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத, தீவிர வலதுசாரி இந்துத்துவ கொள்கைவாதியான மற்றும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் காரணகர்த்தாவான சாவர்க்கர் பிறந்த நாளில் தான் திறக்கப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த நாடாளுமன்றம் திறப்பு விழா குறித்த செய்தி தான் நாடு முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து நாட்டை காட்டிக் கொடுத்தவர் தான் சாவர்க்கர் என்று அவரைக் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. மேலும், அவரை விமர்சித்து ராகுல் காந்தியின் காங்கிரஸ் கட்சி, திமுக, விசிக, கம்யூனிஸ்ட் காங்கிரஸ் உட்பட மொத்தம் 20 கட்சிகள் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்திருக்கின்றனர்.

- Advertisement -

புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா குறித்த சர்ச்சை:

அதுமட்டும் இல்லாமல் தமிழகத்தில் திருமால்வளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் இந்த நாளை துக்க நாளாக அனுசரிப்பதாக வீடுகளில் கருப்பு கொடி ஏந்த சொல்லி அறைக்கூவல் விடுத்திருக்கிறார். இந்த நாளில் புதிய நாடாளுமன்றம் திறப்பதற்கு சாவர்க்கார் பிறந்தநாள் மட்டும் இல்லாமல் வேறு ஒரு காரணம் இருப்பதாகவும் புதிய சர்ச்சை எழுந்து இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, நாடாளுமன்ற இரு அவைகளின் தலைவராக குடியரசுத் தலைவர் இருக்கிறார்.

பிரதமர் மோடி செய்த செயல்:

ஆனால், புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவர் அழைக்கப்படவே இல்லை. காரணம், அவர் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் மூலம் பாஜகவின் ஜாதி வெறி இதில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது என்று இடதுசாரி ஜனநாயகவாதிகள் கொந்தளித்து இருக்கிறார்கள். அதேபோல் ஏற்கனவே, புதிய நாடாளுமன்றத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கூட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலித் பிரிவை சேர்ந்தவர் என்பதால் அவரையும் அழைக்கப்படவில்லை.

-விளம்பரம்-

கொந்தளிப்பில் இந்தியாவில் உள்ள 20 கட்சிகள்:

இது குறித்து நெட்டிசன்கள் எல்லாம் விமர்சித்து இருந்தார்கள். இப்படி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு 20 எதிர்க்கட்சிகள் புறக்கணித்து வரும் நிலையில் பாஜகவின் மூத்த தலைவரும் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் எதிர்க்கட்சிகளுக்கு இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால், யாரும் ஏற்கவில்லை. இப்படி நாடு முழுவதும் இந்த புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு கடும் எதிர்ப்பலைகள் கிளம்பி இருக்கிறது.

ரஜினிகாந்த் டீவ்ட்:

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அதை வரவேற்று ட்விட்டரில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், இந்திய நாட்டின் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் ஜொலிக்கும் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் செங்கோல். தமிழர்களுக்கு பெருமை சேர்த்த மதிப்புக்குரிய பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், பணமதிப்பிழப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களின் உணவுகளுக்கு எதிராக ரஜினி குரல் கொடுத்து இருந்தார். தற்போது புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு ஆதரவை தெரிவித்தது குறித்து நெட்டிசன்கள் பலரும் சோசியல் மீடியாவில் ரஜினிகாந்த் குறித்து விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement