வேட்டையன் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் கொடுத்து இருக்கும் விமர்சனம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் ஜெயிலர் படத்தை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் வேட்டையன். இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கியிருக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அமிதாபச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ரித்திகா சிங், ராணா, துஷாரா விஜயன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைத்து இருக்கிறார். படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஆக இருக்கிறார். எந்த ஒரு பாரபட்சமும் பார்க்காமல் ரவுடிகளை சுட்டு தள்ளுகிறார். இன்னொரு பக்கம் நேர்மையான அரசு பள்ளி ஆசிரியராக துஷாரா விஜயன் இருக்கிறார். ஆனால், இவரை கொடூரமான முறையில் யாரோ ஒருவர் கொலை செய்து விடுகிறார். அந்த வழக்கு ரஜினி இடம் விசாரணைக்கு வருகிறது. இன்னொரு பக்கம் குற்றவாளியை காப்பாற்றுவதற்காக பல வேலைகள் நடக்கிறது. இது தெரியாமல் ரஜினிகாந்த் கடைசி நேரத்தில் உள்ளே வந்து சம்பந்தமில்லாத ஒருவரை என்கவுண்டர் செய்து விடுகிறார்.
வேட்டையன் படம்:
மனித உரிமை அதிகாரியும், நீதிபதியுமாக இருக்கும் அமிதாபச்சன் குழுவினரிடம் இந்த வழக்கு விசாரணைக்கு செல்கிறது. கடைசியில் உண்மையான குற்றவாளி யார்? துஷாரா விஜயனை கொலை செய்தவர்கள் யார்? ஏன் அவர் கொலை செய்யப்பட்டார்? ரஜினிகாந்துக்கு என்ன ஆனது? அமிதாப்பச்சனின் தீர்ப்பு என்ன? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் வேட்டையன் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம், கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்.பியாக சூப்பர் ஸ்டார் இருக்கிறார்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:
இவருக்கு குற்றவாளிகளை பார்த்தாலே நீதிமன்றத்தில் நிறுத்தி தீர்ப்பு வாங்கி தருவதெல்லாம் பிடிக்காது. ஸ்ட்ரைட்டா நாயை சுடுவது போல் சுட்டு தள்ளுவதுதான் பழக்கம். இன்னொரு பக்கம் அமிதாபச்சன் மனித உரிமையை பற்றி பேசுபவர். யார் தப்பு செய்தாலும் அவருக்கு நீதிமன்றம் தான் தண்டனை கொடுக்கும் என்று இருப்பவர். அதேபோல் கன்னியாகுமரியில் ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியராக துஷாரா விஜயன் இருக்கிறார். இவர் பொறுப்பான நபர் என்பதால் எல்லோருக்குமே அவரை பிடிக்கும். அந்த ஊரில் தான் ஒரு கும்பல் கஞ்சா கடத்துகிறது. இதை துஷாரா பார்த்துவிட்டு ரஜினி இடம் சொல்ல, அவர் கஞ்சா கடத்தல் கும்பலின் தலைவரை என்கவுண்டரில் போட்டு விடுகிறார். அதற்குப்பின் ரஜினிகாந்த் ட்ரான்ஸ்பர் வாங்கி சென்னைக்கு வந்து விடுகிறார்.
படம் குறித்து சொன்னது:
இதற்கிடையில் துஷாராவை மர்மமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கிறார்கள். இந்த வழக்கை விசாரிக்க மீண்டும் ரஜினிகாந்த் வருகிறார். குற்றவாளி எங்கிருந்தாலும் அவரை தேடிக் கொல்ல வேண்டும் என்று வெறியோடு இருக்கிறார். அதற்குப்பின் ரஜினி என்ன செய்தார்? அமிதாப்பச்சன் உடைய வேலை என்ன? என்பதை தான் இயக்குனர் சொல்லி இருக்கிறார். இடைவெளி வரும்வரை காட்சி நேர்த்தியாகவும் நன்றாகவும் செல்கிறது. இரண்டாம் பாதியில் தான் கதை. ஆனால், அதை இயக்குனர் சொதப்பி விட்டார். அடுத்து என்ன? என்று யூகிக்க முடியும் அளவிற்கு கதை இருக்கிறது. சில இடத்தில் இது கதையா? என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது.
ரஜினி குறித்து சொன்னது:
மேலும், யார் தவறு செய்தாலும் மரணம் தான் தண்டனை என்று ரஜினிகாந்த் இருக்கிறார். நியாயப்படி பார்த்தால் ரஜினிகாந்த் தான் ஒரு கொலைக்காரன். அவரையே என்கவுண்டரில் போடணும். எல்லோரையும் கொலை செய்யும் ரஜினிகாந்த் மற்றவர்களுக்கு பாடம் சொல்கிறார். இதையெல்லாம் அமிதாப்பச்சன் பார்க்கிறார். இன்னொரு பக்கம் வில்லன் நீட் கோச்சிங் சென்டர் நடத்தி நிறைய அயோக்கியத்தன வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். உண்மையில் நீட் தேர்வு கொண்டு வந்தவர்களை தான் அயோக்கியர்கள் என்று படத்தில் காண்பித்திருக்க வேண்டும். ஆனால், நீட் தேர்வுக்கு கோச்சிங் எடுப்பவர்களை அயோக்கியர்கள் என்று சொல்கிறார்கள். அனிருத் மியூசிக் நன்றாக தான் இருக்கிறது. அமிதாப் பச்சன், பகத் பாஸில் நடிப்பு நன்றாக இருக்கிறது. ஆனால், இந்த கதாபாத்திரத்தில் இவர்கள் நடிக்கணுமா? என்று யோசிக்க வைக்கிறது என்று கூறியிருக்கிறார்.