சர்ச்சைக்கு உள்ளான காக்கா கழுகு கதை – லால் சலாம் விழாவில் ரஜினி விளக்கம்.

0
403
- Advertisement -

காக்கா- கழுகு குறித்த சர்ச்சைக்கு ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த படம் ஜெயிலர்.

-விளம்பரம்-

இந்த படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன் லால் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்திருந்தது. இதனை அடுத்து பல படங்களில் ரஜினி கமிட் ஆகி இருக்கிறார். அந்த வகையில் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் லால் சலாம். இந்த படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் இயக்கியிருக்கிறார்.

- Advertisement -

இசை வெளியீட்டு விழா :

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் மொய்தீன் பாய் என்ற கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் ரஜினி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உட்பட குழுவினர் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள்.

விழாவில் ரஜினிகாந்த் பேசியது:

அப்போது விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், நான் சொன்ன அந்த காக்கா- கழுகு கதையை அப்படியே வேற மாதிரி சோசியல் மீடியா பரப்பி விட்டார்கள். நான் விஜய்க்கு சொன்ன மாதிரி சோசியல் மீடியாவில் எல்லாம் சொல்லி இருக்கிறார்கள். அது எனக்கு நிஜமாகவே வருத்தம் அளித்தது. விஜய் என் கண் முன்னாடி வளர்ந்த பையன். தர்மத்தின் தலைவன் படத்தின் சூட்டிங் போது அவரை நான் பார்த்தேன். அப்போது அவருக்கு 13 வயது. சூட்டிங் முடித்த பிறகு அவருடைய அப்பா சந்திரசேகர் என்னிடம் விஜய் அறிமுகம் செய்து இருந்தார்.

-விளம்பரம்-

விஜய் குறித்து சொன்னது:

பின் அவனுக்கு நடிப்பில் விருப்பம் இருக்கிறது என்று சொன்னார். நான், படிக்கிற பையன். படித்து முடித்து வந்து நடிக்கட்டும் என்றெல்லாம் அறிவுரை சொல்லினேன். அதற்குப் பிறகு விஜய் கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு அவர் வந்திருக்கிறார். அவர் இந்த இடத்திற்கு வந்திருப்பதற்கு காரணம் அவருடைய ஒழுக்கம், உழைப்பு, திறமை தான். அடுத்து அவர் அரசியலிலும் போக இருக்கிறார். இதில் எனக்கும் விஜய்க்கும் போட்டி என்று சொல்வது நிஜமாகவே மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு.

ரஜினி வைத்த வேண்டுகோள்:

விஜய்யே ஒருமுறை சொல்லி இருக்கிறார். எனக்கு நான் தான் போட்டி. என் படத்துக்கும் நான் தான் போட்டி என்று சொல்லி இருந்தார். விஜய் எனக்கு போட்டி என்று நான் நினைச்சா எனக்கு மரியாதையே இல்ல, எனக்கு கௌரவம் இல்ல. விஜய்யும், ரஜினிகாந்த் தனக்கு போட்டியின்னு சொன்னா அவருக்கும் மரியாதை இல்லை. தயவு செஞ்சு ரெண்டு பேருடைய ரசிகர்களும் கம்பேர் பண்ணி போடாதீங்க. காக்கா கழுகு எல்லாம் வேண்டாம். இந்தப் பிரச்சினையை முடித்து விடுங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள். ரொம்ப நன்றி என்று பேசி இருக்கிறார்.

Advertisement