பீட்டா அமைப்பிற்காக ரகுல் ப்ரீத் சிங் கொடுத்த போஸ். முகம் சுளித்த ரசிகர்கள்.

0
3151
rakul
- Advertisement -

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் ராகுல் பிரீத் சிங். இவர் தமிழ், தெலுங்கு ,மலையாளம், இந்தி போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நடிகை ரகுல் பிரீத் சிங் அவர்கள் தன்னுடைய 18 வயதிலேயே மாடலிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அதற்குப் பின்னர் சினிமாத் துறையில் படங்களில் நடிக்க தொடங்கினார். முதலில் இவர் ரீமேக் படங்களில் தான் நடித்து வந்தார். அதற்கு பிறகு தான் முன்னணி நடிகர்கள் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் வந்தது.

-விளம்பரம்-

மேலும், நடிகை ரகுல் பிரித் சிங் ‘தடையறத் தாக்க’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் மொழியில் அறிமுகம் ஆனார். இவர் தமிழில் தீரன், ஸ்பைடர்,தேவ், என்.ஜி.கே போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். சமீபத்தில் கூட நடிகை ராகுல் ப்ரீத் சிங் அவர்கள் சைவத்திற்கு மாறி இருப்பதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும், அம்மணி peta அமைப்பின் ஆதரவாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

தான் சைவத்திற்கு மாறிய காரணத்தை கூறிய ரகுல் ப்ரீத் சிங், தன் வாழ்வில் எடுத்திலேயே இது தான் சிறந்த முடிவு. நான் ஒரு தீவிரமான அசைவ விரும்பி. எனக்கு காய்கறிகள் சாப்பிடுவது பிடிக்காமல் இருந்தது. என்னுடைய வாழ்வில் இறைச்சி ஒரு முக்கியமாக இருந்தது. குறிப்பாக முட்டை சொல்லலாம். இருந்தாலும் நான் முற்றிலும் சைவ உணவிற்கு மாற முடிவு செய்தேன். இது திடீரென்று எடுக்கப்பட்ட முடிவல்ல. இப்போது நான் உடல் எடை குறைந்தும், ஆரோக்கியமாகவும், ஆற்றலுடனும் இருப்பதாக உணருகிறேன்.

ஷூட்டிங்காக நான் பல இடங்களுக்கு செல்ல வேண்டி இருப்பதால் எல்லா இடங்களிலும் சைவ உணவு கிடைக்கிறதா? என்பது கேள்வி தான். அதனால் தான் நான் வீட்டில் இருந்தே காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதற்கு எடுத்துச் செல்வேன். மேலும், மும்பையில் நடக்கும் படப்பிடிப்பிற்கு வீட்டில் இருந்தே நான் பழங்களை எடுத்துச் செல்கிறேன். அதே சமயம் வெளிநாடுகளுக்கு படப்பிடிப்பு செல்லும் போதும் அரிசியுடன் காய்கறி, பருப்பு கலந்து சமைக்கிறார்கள். இந்த நிலையில் அம்மணி pete அமைப்பிற்கு ஆதரவாக ஒரு புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் கொஞ்சம் முகம் சுளித்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement