11 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை, தொப்புள் கொடி ரத்தத்தை சேமித்த ராம் சரண். என்ன காரணம் ? செலவு எவ்வளவு தெரியுமா ?

0
2723
- Advertisement -

ராம்சரண்- உபாசனா தம்பதியின் குழந்தை தொப்புள் கொடி ரத்தம் சேமிக்கப்பட்டிருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் நடிப்பில் வெளிவந்த படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார். தந்தையைப் போலவே மகனும் டோலிவுட்டில் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

ராம் சரண் அவர்கள் நடிப்பது மட்டும் இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். சமீபத்தில் நடிகர் ராம் சரண் அவர்கள் தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான RRR என்ற படத்தில் நடித்து இருந்தார். மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து ராம்சரண் அவர்கள் ஷங்கர் இயக்கத்தில் ஆர் சி 15 என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே நடிகர் ராம்சரண் அவர்கள் 2011ஆம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

ராம்சரண்- உபாசனா குழந்தை:

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. சமீபத்தில் தான் ராம் சரண் தந்தையாகும் செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் சில தினங்களுக்கு முன் தான் ராம்சரண்-உபாசனா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் ராம்சரண்- உபாசனா குழந்தையின் தொப்புள் கொடியில் இருந்து ரத்தம் சேகரிக்கப்பட்டு தனியார் நிறுவனத்தில் பாதுகாத்து வருகின்றனர். இதை உபாசனா அவர்கள் தன்னுடைய டீவ்ட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

குழந்தையின் தொப்புள் கொடி:

அது மட்டும் இல்லாமல் பாலிவுட் நடிகைகள் கஜோல், ஷில்பா ஷெட்டி, நடிகர் மகேஷ் பாபுவின் மனைவி ஆகியோரும் தங்கள் குழந்தைகளின் தொப்புள் கொடியில் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்தத்தை பாதுகாத்து வருகின்றனர். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. குழந்தை பிறந்த பிறகு தொப்புள் கொடி மற்றும் நஞ்சுக்கொடியில் கொஞ்சம் ரத்தம் இருக்கும். இந்த ரத்தம் தொப்புள் கொடி ரத்தம் என்று அழைக்கப்படுகிறது. உயிரணுக்கள் உருவாகும் போது எலும்பு மஜ்ஜையில் இதே போன்ற செல்களாகத் தான் உருவாகின்றன.

-விளம்பரம்-

தொப்புள் கொடி ரத்தம் குறித்த தகவல்:

குழந்தை பிறந்த பிறகு தொப்புள் கொடி மற்றும் நஞ்சுக்கொடியில் இருந்து ஸ்டெம் செல்களை (குறுத்தணுக்களை) சேமித்து வைப்பதற்கென்றே தனியாக “ரத்த குறுத்தணு வங்கிகள்” செயல்படுகின்றன. குழந்தைக்கு எதிர்காலத்தில் ஏற்படும் சில சிக்கலான நோய்களுக்கான சிகிச்சையில் இந்த குருத்தணுக்கள் மிகுந்த பயனுள்ளவையாக இருக்கும் . லியூக்கீமியா, தலசீமியா, சிக்கிள் செல் அனீமியா, மைலோமாஸ் மற்றும் லிம்ஃபோமா போன்ற நோய்களுக்கான சிகிச்சைகளை இதற்கு சில உதாரணங்களாகக் கொள்ளலாம்.

தொப்புள் கொடி ரத்தம் பாதுகாக்க வாங்கும் கட்டணம்:

மேலும், ஒவ்வொரு நிறுவனமும் தொப்புள் கொடி ரத்தத்தை சேமிப்பதற்கு வெவ்வேறு வகையான கட்டணங்களை வாங்குகிறது. உதாரணத்திற்கு 25 வருடங்களுக்கு இந்த குருத்தணுக்களை பாதுகாக்க கட்டணமாக ஒரு நிறுவனம் 55 ஆயிரம் ரூபாய் வாங்குகிறது. அதே குருத்தணுக்களை 75 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்க 75 ஆயிரம் வரை கட்டணம் செலுத்துகின்றது . இந்த தொப்புள் கொடி ரத்தத்தை எடுப்பதற்கும் குருத்தணுக்களை பிரித்தெடுப்பதற்குமான கட்டணங்களை காப்பீடு மூலம் தான் பெற முடியும்.

தொப்புள் கொடியை சேமித்த பிரபலங்கள் :

அதோடு இந்த தொப்புள் கொடியில் இருந்து ரத்தத்தை சேகரிப்பதால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது என ஹைதராபாத்தில் உள்ள மருத்துவர் கூறி இருக்கிறார். திரையுலக பிரபலங்கள் இதுபோன்று தொப்புள் கொடி ரத்தத்தை சேமிப்பது புதிதான விஷயம் ஒன்றும் இல்லை. பாலிவுட் நடிகைகள் கஜோல், ஷில்பா ஷெட்டி, நடிகர் மகேஷ் பாபுவின் மனைவி ஆகியோரும் தங்கள் குழந்தைகளின் தொப்புள் கொடியில் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்தத்தை பாதுகாத்து வருகின்றனர். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement