இலவசமாக ஹெல்மெட், அன்னதானம் விஜய் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் போட்ட திட்டம் – போலீஸ் விதித்த தடை. இதான் காரணம்.

0
1655
Vijay
- Advertisement -

திருப்பூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-

இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கத்தில் சார்பில் மாணவர்கள் பரிசு விழா நடந்தது.

- Advertisement -

விஜய் வழங்கிய பரிசு விழா:

அதில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சி ஜூன் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்வு சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் விஜய் அவர்கள் மாணவர்களுக்கு சால்வை அணிவித்து புகைப்படம் எடுத்து இருக்கிறார்.

விஜய் பிறந்தநாள் நிகழ்ச்சி:

இந்த விழாவை குறித்து பலரும் நடிகர் விஜய்யை பாராட்டி இருந்தார்கள். இந்நிலையில் இன்று விஜயின் பிறந்தநாள். இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார்கள். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வந்தது.

-விளம்பரம்-

திருப்பூர் விஜய் ரசிகர்கள்:

அதில் கொடிக்கம்பம் நடுதல், ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இலவசமாக ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி, அன்னதானம் வழங்குதல் போன்ற பல விஷயங்களை ரசிகர்கள் செய்து செய்து வருகிறார்கள். மேலும், இதை அவிநாசி ஒன்றிய மாணவர் அணி தலைவர் அமீன் என்பவர் இந்த ஏற்பாடை செய்ய அவிநாசி காவல்துறையிடம் அனுமதி கேட்டு இருக்கிறார். அதற்கு அவர்களுக்கும் அனுமதி கொடுத்தார்கள். பின் தளபதி விஜய் இளைஞர் அணி சார்பில் மாவட்ட இளைஞரணி தலைவர் ஷபி என்பவர் அவிநாசி புதிய பேருந்து நிலையத்தின் முதல் பழைய பேருந்து நிலையம் வரை 50 இரு சக்கர வாகன பேரணி நடத்த அனுமதி கேட்டிருக்கிறார்.

அவிநாசி போலீஸ் கொடுத்த விளக்கம்:

இதற்கு போலீஸ் தரப்பில் இருந்து அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த தகவல் தான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அவிநாசி போலீஸ் கூறியிருப்பது, விஜய் ரசிகர் அமீன் அன்னதானம், ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அதற்கு அனுமதி தந்தோம். ஷபி விண்ணப்பித்த ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான வாகனங்கள் கலந்து கொள்ள இருப்பதால் பாதுகாப்பு குறித்து கருத்தில் கொண்டு அனுமதி மறுக்கப்பட்டது. மற்றபடி அன்னதானம், ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement