ராமர் கோவிலுக்காக இலவசவாக ராம் சரண் மனைவி செய்துள்ள செயல் – யோகியிடம் கொடுத்த விஷயம்.

0
135
- Advertisement -

அயோத்தி ராமர் கோயிலுக்காக ராம்சரணின் மனைவி செய்திருக்கும் செயல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் ராம் சரண். இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார். தந்தையைப் போலவே மகனும் டோலிவுட்டில் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறார். சமீபத்தில் நடிகர் ராம் சரண் அவர்கள் தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான RRR என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து ராம்சரண் அவர்கள் ஷங்கர் இயக்கத்தில் ஆர் சி 15 என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது.

- Advertisement -

ராம்சரண் குடும்பம்:

இதனிடையே நடிகர் ராம்சரண் அவர்கள் 2011ஆம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. இருந்தாலும், இவர்களுக்கு குழந்தை இல்லை என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி கொண்டே தான் இருந்தார்கள். பின் கடந்த ஆண்டு ராம்சரண் மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார்கள். பின் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

உபசனா செய்த செயல்:

இந்த நிலையில் ராம்சரனின் மனைவி உபசனா அவர்கள் தன்னுடைய பாட்டி, தாத்தாவுடன் சேர்ந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றிருக்கிறார். இவருடைய தாத்தா வேற யாரும் இல்லை அப்போலோ நிறுவனர் பிரதாப் ரெட்டி தான். பின் இவர் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச மருத்துவ சேவையை வழங்குகிறார்கள்.

உபசனா பதிவு:

இதற்காக இவர்கள் அதிநவீன அவசர சிகிச்சை மையத்தையும் திறந்து வைத்திருக்கிறார்கள். இதற்காகத்தான் இவர்கள் யோகி ஆதித்யநாத்தை சந்திக்கிறார்கள். மேலும், இது தொடர்பாக உபசனா சோசியல் மீடியாவில், ராம் லல்லாவின் ஆசியுடன் அயோத்திக்கு வரும் பக்தர்களுக்காக இலவச அவசர சிகிச்சை மையத்தை திறந்திருப்பதை அப்பல்லோ அறக்கட்டளை சார்பில் மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்கிறோம்.

நெட்டிசன்கள் வாழ்த்து:

தாத்தாவின் விஷனில் நம்பிக்கை வைத்த முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு நன்றி.
கூடிய விரைவில் உத்திரபிரதேசத்தில் 300 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட இருக்கிறோம் என்றும் கூறியிருக்கிறார். தற்போது உபசினாவின் இந்த பதிவுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் உபசனா செயலை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே அயோத்தி ராமர் கோயிலுக்கு ராம்சரண் தன்னுடைய அப்பா சிரஞ்சீவி உடன் சென்றிருந்தார், ஆனால், அப்போது அவருடைய மனைவி உபசனா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement