நீங்கள் ஆசிர்வதிக்கபட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.! பேரன்பு படத்தின் விமர்சனம்.!

0
1522
peranbhu
- Advertisement -

கற்றது  தமிழ், தங்க மீன்கள், தரமணி வரிசையில் இயக்குனர் ராமின் படைப்பில் உருவாகியுள்ள மற்றொரு படைப்பு தான் ‘பேரன்பு’. மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது காணலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

- Advertisement -

என் வாழ்க்கையில நடத்த சில விஷயங்களை தேர்ந்தெடுத்து இந்த கதைய நான் எழுதுறேன். நீங்க எவளோ நல்ல, ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கீங்கன்னு புரிஞ்சிக்கறதுக்காக இத நான் எழுதுறேன்,”  என்ற வாய்ஸ் ஓவரில் ஆரமிக்கிறது படம்.

அமுதன் (மம்மூட்டி) 11 வருடங்களாக வெளிநாட்டில் டாக்சி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். தனது மகள்
ஸ்பாஸ்டிக் எனப்படும் மூலை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் மம்மூட்டியிடம் இருந்து அவரது மனைவி பிரிந்து சென்றுவிட மாற்றுதிறனாளி மகளான பாப்பாவை (சாதனாவை) தனித்து வளர்க்கும் பொறுப்பு அமுதவனிடம் வந்து சேர்கிறது. இவர்கள் இருவர் வாழ்வில் இயற்கை எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை இவர்கள் கடந்து செல்லும், இவர்களை கடந்து செல்லும் மனிதர்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

படத்தை பற்றிய அலசல் :

இந்த உலகத்தில் பலருக்கும் பல விதமான கஷ்டங்கள் இருக்கிறது. ஆனால், இந்த படத்தை பார்த்தால் உங்களுக்கு இருப்பதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்பதை சொல்லும் ஒரு படமாக இதனை உருவாக்கியுள்ளார் ராம். மூளை வளர்ச்சி இல்லாதா தனது மகளை ஒரு தனி மனிதனாக இருந்து ஒரு தந்தை எப்படி வளர்க்கிறார். அவருக்கு வரும் பெரும் துயரங்களையும் எப்படி அவர் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார் என்பது தான் படத்தின் முக்கிய கரு.

ஒரு தாயின் அறைவனைப்பிலே வளர்ந்த அந்த ஒரு குழந்தை புதிதாக பார்த்த தன் தந்தையை வெறுக்கிறது. அமுதன் எத்தனை முயன்றும் பாப்பா அவரை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்.  “சூரியனும் பனியும் போல வசிக்க துவங்கினோம்” என்று தங்கள் உறவை விவரிக்கிறார் அமுதன்.

தனது மகளுக்கு தான் தான் அப்பா என்று அமுதன் எவ்வளவோ போராடி கொண்டிருக்கையில் மம்மூட்டியின் அம்மாவான வடிவுக்கரசி எப்படியாவது அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயன்று வருகிறார். ஆனால், அவர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.

இப்படியே சென்று கொண்டிருக்க அந்த வீட்டில் வேலை செய்யவது போல உள்ளே நுழைகிறார் அஞ்சலி. பின்னர் மம்முட்டியை அஞ்சலி திருமணம் செய்துகொள்கிறார் அஞ்சலி. அதன் பின்னர் தான் கதையில் ஒரு பெரிய ட்விஸ்ட்.

இறுதியில் வசித்த சொந்த வீட்டை விட்டுவிட்டு வயதிற்கு வந்த மகளுடன் மம்மூட்டி என்னவானர. இறுதியில் அவரது மகளின் நிலைமை என்னவானது என்பதை மிகவும் உருக்கமான கதை கொண்டு நம்மை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது இந்த படம்.

ப்ளஸ் :

மலையாளத்தில் மம்மூட்டியை ஏன் இன்னும் கொண்டாடுகிறார் என்பது இந்த படத்தில் இருந்து தெரிகிறது. ராமின் அழுத்தமான கதை,வசனம்,காட்சியமைப்பு இப்படி ஓவ்வொன்றும் நமமை கண்கலங்க வைத்துவிடுகிறது. இதில் ப்ளஸ் மட்டும் பார்த்தால் மம்மூட்டி மற்றும்
 சாதனாவின் நடிப்பு, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு, யுவனின் பின்னணி, கலைஞ்சர்கள் தேர்வு என்று இப்படி ஏராளமாக சொல்லிகொண்டே போகலாம்.

மைனஸ் :

படத்தில் குறை சொல்லும் அளவு எதுவும் இல்லை. ராமின் ரசிகர்களாக இல்லை என்றால் இது உங்களுக்கு கொஞ்சம் உங்களை கவர தவறலாம்.

இறுதி அலசல் :


இந்த திரைப்படம் பார்க்கும்போது கண்டிப்பாக பல இடங்களில் பாலு மஹேந்திராவின் மூன்றாம் பிறை, விக்ரமின் தெய்வதிருமகள் போன்ற திரைப்படங்கள் நமக்கு நினைவுக்கு வரும். கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பார்க்ககூடிய ஒரு அற்புதமான திரை காவியம். இந்த படத்திற்கு Behindtalkies-ன் மதிப்பு 8.5/10.

Advertisement