ரெண்டு பேரும் என் அமெரிக்கா ஆசையைத்தான் நிறைவேற்றல. இயக்குனர் ஆசையை டபுளாக நிறைவேற்றுவாங்கன்னு நம்புறேன் – ரமேஷ் கண்ணா

0
174
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகரான ரமேஷ் கண்ணா, தனது மகனை மணிரத்தினம் உதவி இயக்குனராக சேர்த்துக்கொள்ள மறுத்ததாக சொன்ன தகவல், இப்போது வைரலாகி உள்ளது. இவர் நகைச்சுவை நடிகர் மற்றும் இல்லாமல் துணை இயக்குனராகவும் பணியாற்றியவர். இவர் இயக்குனர் விக்ரமனின் இயக்கத்தில் வெளிவந்த ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ என்ற படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .அதைத் தொடர்ந்து, இவர் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும் நடிகர் ரமேஷ் கண்ணாவை ஒரு காமெடி நடிகராக தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் இயக்குனர், வசனகர்த்தா போன்ற பல்வேறு திறமைகளை கொண்டவர் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. இவர் ஆண்பாவம், பூவே உனக்காக, சூரிய வம்சம், உன்னை நினைத்து போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகராக பணியாற்றி இருக்கிறார். அதேபோல் இவர் சூப்பர் ஸ்டார் நடித்த பல படங்களுக்கு மாஸ் வசனத்தைக் கூட எழுதி இருக்கிறார்.

- Advertisement -

ரமேஷ் கண்ணா கடந்து வந்த பாதை:

சினிமாவில் தான் கடந்து வந்த பாதையை பற்றி ரமேஷ் கண்ணா கூறுகையில், தான் சினிமாவை கனவாகக் கொண்டு அதை துரத்திக் கொண்டிருந்த காலத்தில் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமில்லை என்றார். ஆனால் அத்தனை வலியும் பின்னர் நினைத்துப் பார்க்கையில் காமெடி ஆகிடும் என்றும், தனக்கு ஸ்கூல் படிக்கும்போதே நாடகம், நடிப்பு, பாட்டுலதான் கவனம் என்றார்.

ரமேஷ் கண்ணா மகன்கள் குறித்து:

மேலும் அவர் கூறுகையில், தனது மகன்களை நல்லா படிக்க வைக்கணும் என்று அவரும் அவர் மனைவியும் முடிவு செய்திருக்களாம். அதேபோல், ‘பசங்க படிச்சு முடிச்சு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்கு வெளிநாடு போயிட்டா, நாமளும் வயசானத்துக்கு அப்புறம் ரெண்டு பசங்க வீட்டுக்கும் போய் மாறி மாறி இருக்கலாம்’னு யோசிச்சாரம். அதுக்கேத்த மாதிரியே ரெண்டு பசங்களும் படிச்சு முடிச்சு ‘விப்ரோ’ நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்கள் என்றார்.

-விளம்பரம்-

ஏ. ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குனரான மூத்த மகன்:

அதன் பிறகு தனது மூத்த மகன் ஜஸ்வந்த், அப்பா நான் வேலையை ரிசைன் பண்ணிட்டு சினிமாவுக்கு வரேன் என்றதும் நடிகன் ஆவதெல்லாம் ஈஸி இல்லை என்றாராம். அதற்கு அவருடைய மகன், ‘நான் நடிக்கல டைரக்டர் ஆகணும், அசிஸ்டன்ட்டா சேர்த்து விடுங்க’ என்றதும் ஏ.ஆர்.முருகதாஸிடம் கூட்டிட்டு போய்ட்டாராம். பிறகு தனது மகன் ஸ்பைடர், சர்க்கார் போன்ற படங்களில் ஏ.ஆர்.முருகதாஸிடம் வேலை பார்த்ததாக கூறினார்.

மூத்தவனை தொடர்ந்து இளையவனும்:

அதனைத் தொடர்ந்து பெரிய பையன் வழி சரியாக இருக்குனு சந்தோஷப்படும்போதே, சின்ன பையன் பிரதீஷ் தன்னிடம் வந்து அப்பா, “என்னை மணி சார் கிட்ட சேர்த்து விடுங்க” என்றவுடன் அவரைப் பார்க்க போனார்களாம். ஆனால் மணிரத்தினம் , ” இப்போ அசிஸ்டென்டா சேர்ந்து எப்போ டைரக்டர் ஆகிறது? கோ.. டேக் சம் ஷார்ட் ஃபிலிம்ஸ் என்றாராம். அதன் பிறகு தனது இளைய மகன், “தி காட்ஃபாதர்” என்ற குறும்படம் எடுத்ததின் மூலம் மணியிடம் உதவி இயக்குனரார் என்றவர், தனது மகன்கள் அமெரிக்கா ஆசையைத்தான் நிறைவேற்றல ஆனால் இயக்குனர் ஆசையை டபுளாக நிறைவேற்றுவார்கள் என்று நம்புறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement