நமது நாட்டில் பெமினிசம் இப்படி தான் பிரதிபலிக்கிறதா? மோடி நடவடிக்கை எடுக்கனும் – ரோஜாவிற்கு ஆதரவாக கொதித்த ராஜமாதா.

0
1306
- Advertisement -

அமைச்சர் ரோஜா குறித்து எழுந்த சர்ச்சைக்கு நடிகை ரம்யா கிருஷ்ணன் ரோஜாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளார். ரோஜா ஆபாச படத்தில் நடித்தார் என்று தெலுங்கு தேசம் கட்சியின் சட்டசபையில் அவருடைய சிடிகள் காட்டப்பட்டிருந்தது. இது குறித்து தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சரும் குறித்து தலைவருமான பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி அவர்கள் ரோஜாவை குறித்து மிக மோசமாக பேசியிருந்தார்.

-விளம்பரம்-

இதனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை அடுத்து நடிகை ரோஜா அவர்கள் தன்னுடைய வீட்டில் கண்ணீர் மல்க பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், நான் ஆபாச படத்தில் நடித்ததாக கூறி என்னை சித்திரவதை செய்கின்றனர். சட்டசபையிலும் சீடிக்கள் எல்லாம் காட்டப்பட்டது. ஆனால், அந்த சீடியில் இருப்பது நான் தான் என்று நிரூபிக்கப்படவில்லை. பெண்கள் தங்கள் விருப்பப்படி வாழ வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறது.

- Advertisement -

ரோஜா அளித்த பேட்டி:

என் குணத்தை மதிப்பிட நீங்கள் யார்? தெலுங்கு தேசம் கட்சி பெண்களை விளையாட்டு பொருளாக நடத்துகிறது. உங்கள் வீட்டில் உள்ள பெண்களை பற்றி இப்படி பேசினால் ஏற்றுக்கொள்வீர்களா? முன்னாள் அமைச்சர்கள் காந்தா ஸ்ரீனிவாஸ், அய்யண்ணபத்ரா, சந்திரபாபு நாயுடு, லோகேஷ் ஆகியோர் இது தொடர்பாக கண்டிக்காதது ஏன்? தெலுங்கு தேசம் கட்சி ஒரு திரையுலக பிரமுகரால் நிறுவப்பட்ட கட்சி. பண்டாரு சத்தியநாராயணனின் பேச்சை கேட்டு அவருடைய மனைவியே அறைந்திருக்க வேண்டும்.

தெலுங்கு தேசம் கட்சி குறித்து சொன்னது:

லோகேஷ் வெட்கமின்றி அதற்கு டீவ்ட் செய்கிறார். சந்திரபாபு நாயுடு என்னை பிரச்சாரத்திற்கு அழைத்தது ஏன்? நான் கெட்டவள் என்றால் என்னை ஏன் கட்சியில் சேர்த்தார்? என்னை அயர்ன் லெக் என்று கேலி செய்தார்கள். நான் உங்கள் கட்சியில் இருக்கும்போது நல்லவராகவும் வேறு கட்சியிலிருக்கும் போது கெட்டவராகவும் எப்படி இருக்க முடியும். பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி என்னை பற்றி தவறாக பேசியது என்னை ரொம்ப புண்படுத்திருக்கிறது.

-விளம்பரம்-

கைதான பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி:

தப்பை கேள்வி கேட்டால் என்னை தாக்கி பேசுவார்களா? தெலுங்கு தேசம் கட்சியில் பெண்களுக்கு மரியாதை இல்லை. பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி மீது நான் மான நஷ்ட வழக்கு தொடர்வேன் என்று கூறி இருந்தார். இதனை அடுத்து நடிகை ரோஜாவை போலீசார் அவதூறாக பேசிய வழக்கில் பண்டாரு சத்தியநாராயண மூர்த்தியை கைது செய்திருக்கின்றனர். பின் விசாகப்பட்டினத்தில் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் மாநில மகளிர் அணி தலைவி வாங்கலபுடி அனிதா அவர்கள் ரோஜா குறித்து விமர்சித்து அமைச்சர் ரோஜா படத்தின் டிரைலர் மட்டும்தான் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் ஒரிஜினல் படத்தையே வெளியிடுவோம் என்று பேசியிருந்தார்.

ரம்யா கிருஷ்ணன் கூறியது:

இந்த சர்ச்சை குறித்து தனது தோழிக்கு ஆதரவு அளித்த ரம்யா கிருஷ்ணன் சில கருத்துக்களை கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் பண்டார சத்ய நாராயணன் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது ரோஜாவை பற்றி இப்படி ஒரு கீழ் தரமான விமர்சனத்தை தான் தோழியாகவும் ஒரு பெண்ணாகவும் என்னை மிகவும் காயப்படுத்தியது. வீட்டில் இந்த நாட்டின் பெண்களால் என்றும் எவ்வளவு தாங்க முடியும் பிரச்சினைகளை அனுபவித்து வருகிறோம் என்றும் ரம்யா கிருஷ்ணன் கூறியிருந்தார்.

அத்தகைய விமர்சனம் ஆனது ரோஜாவை மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தை தாக்கி இருந்தது. இதுபோன்ற பெண்களுக்கு பாலியல் வன்கொடுமையிலும் இது போன்ற வன்கொடுமைகளிலும் பெண்களை பாதுகாக்க ஆண்கள் பெண்கள் என இருவரும் இணைந்து போராட வேண்டும். மேலும் பிரதமர் மோடி இதற்கு தலையிட்டு அவரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். நடிகை ராதிகாவும் அவருக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிட தக்கது.

Advertisement