ஊரடங்கில் சத்தமில்லாமல் நிச்சயதார்த்தத்தை முடித்த பாகுபலி புகழ் ராணா. வைரலாகும் புகைப்படங்கள்.

0
888
rana
- Advertisement -

தமிழில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த ‘ஆரம்பம்’ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பரிட்சியமானார் நடிகர் ராணா. அதன் பின்னர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும் ‘பாகுபலி’ படத்தின் மூலம் உலகலவில் பிரபலமடைந்தார். பாகுபலியில் இவரது உடலமைப்பை கண்டு பலரும் வியந்து போனர். நடிகர் ராணாவிற்கும் நடிகை திரிஷாவுக்கும், இடையில் காதல் என தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மீடியாவிலும் செய்தி வந்தது. ஆனால், இதுகுறித்து இருவருமே மௌனம் சாதித்து வந்தனர்.

-விளம்பரம்-
Rana Daggubati makes engagement with Miheeka Bajaj 'official'

ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியில் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்ற ராணாவிடும் திரிஷாவுடனான காதல் குறித்து கேட்கப்பட்டது. முதலில் மழுப்பலான பதிலை சொன்ன ராணா, பின்னர் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டும் தான். நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை. நாங்கள் இருவரும் டேட்டிங் கூட சென்றிருக்கிறோம்.

- Advertisement -

ஆனால், சில பல காரணங்களால் எங்களுக்குள் உறவு நீடிக்கவில்லை என்றுகூறி இருந்தார். இந்த நிலையில் தனது காதலியை அறிமுகம் செய்து வைத்து அணைத்து வதந்திகளுக்கும், சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ராணா. சமீபத்தில் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ‘அவங்க சரினு சொல்லிட்டாங்க’ என்று குறிப்பிட்டுள்ளார் ராணா.

Rana Daggubati makes engagement with Miheeka Bajaj 'official'

தற்போது ராணா டகுபதி மிஹீகா பாஜாஜ் இருவருக்கும் நிச்சயம் நடைபெற்ற புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் ராணா. மேலும், அவருக்குத் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். தேசிய ஊரடங்கு அமலில் இருப்பதால் யாருக்கும் சொல்லாமல், தெரிந்தவர்களை மட்டும் அழைத்து நிச்சயத்தை நடத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

ஹைதராபாதைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ் இன்டீரியர் டிஸைனராக இருந்து வருகிறார். மேலும், சொந்தமாக ட்யூ ட்ராப் டிஸைன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். நிகழ்ச்சி மேலாண்மை (event management), ஆடை வடிவமைப்பு, பர்ஸ், ஹேண்ட்பேக் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனத்தின் மூலம் செய்து வருகிறார். மேலும், பகுதி நேர மாடலாகவும் சில விளம்பரங்களில், அட்டைப் படங்களிலும் தோன்றியுள்ளார்.

Advertisement