ராஷ்மிகா மந்தனாவின் லிப் லாக் முத்த காட்சி போஸ்டர் தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ராஷ்மிகா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.
தனது முதல் படத்திலேயே இவர் அனைவர் மனதையும் கொள்ளையடித்தார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.
ராஷ்மிகா மந்தனா திரைப்பயணம்:
பின் தமிழில் கார்த்தி உடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் நடித்து இருந்தார். இதனை அடுத்து சமீபத்தில் வெளிவந்த விஜய்யின் வாரிசு என்ற படத்தில் ராஸ்மிகா நடித்து இருந்தார். இந்த படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி இருந்தார். இந்த படத்தை தில் ராஜு தயாரித்து இருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும், வசூலையும் வாரி குவித்து இருந்தது.
ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படங்கள்:
இதனை அடுத்து தற்போது ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு ராஷ்மிகா மந்தனா- அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புஷ்பா. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் ராஷ்மிகா நடித்திருக்கிறார். பின் தமிழில் ரெயின்போ, மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். அதோடு சமீபத்தில் ஹிந்தியில் இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த படம் மிஷன் மஜ்னு.
அனிமல் படம்:
இதை அடுத்து ஹிந்தியில் தற்போது இவர் ரன்பீர் கபருடன் இணைந்து அனிமல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை Sandeep Reddy Vanga இயக்கி இருக்கிறார். இந்த படம் இந்தியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் தொடர்பான போஸ்டர் தான் வெளியாகியிருக்கிறது. அதில் ராஸ்மிகாவும் ரன்பீரும் லிப் லாக் செய்திருக்கிறார்கள். தற்போது இந்த புகைப்படம் தான் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வரலாகி வருகிறது. மேலும், இந்த ரொமான்டிக் பாடல் நாளை வெளியாக இருக்கிறது.