கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியா ஹாட் டாபிக்கே சிஎம் விஜய் தான். இவர் அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடந்த தேர்தலில் 85 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக அறிவித்திருந்தார்கள். பின் தேர்தலின் முடிவில் எல்லா கட்சியையும் தவெக கட்சி கதி கலங்க வைத்தது. தமிழகத்தில் 108 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் தவெக கட்சி இருந்தது. இதை அடுத்து பெரும்பான்மையாக எம் எல் ஏக்கள் பெற்று விஜய் அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்றார்.

பதவி ஏற்றவுடன் விஜய் அவர்கள் செம மாஸாக பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார். மேலும், விஜய் அவர்கள் பதவி ஏற்ற பின் மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்று இருந்தார்கள். தன்னுடைய வேலையை சிறப்பாக விஜய் அவர்கள் செய்து கொண்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, விஜய் எந்த ஒரு செய்தியாளர்களையுமே சந்தித்து பேட்டி கொடுக்கவில்லை. எதற்காக இப்படி செய்கிறார்? எல்லா கோயில்களுக்கும் செல்கிறார்.
விஜய் அரசியல்:
எந்த ஒரு செய்தியாளர்களையும் சந்தித்து பேசுவது இல்லை. இதற்கு என்ன காரணம்? என்று பேட்டியில் தொகுப்பாளர் கேட்டிருக்கிறார். இதற்கு ரங்கராஜ் பாண்டே, விஜய் அவர்கள் கோயிலுக்கு போவது மத நல்லிணக்கத்தை குறிக்கிறது. ஜோசப் விஜய் என்று அவர் பெயர் இருந்தாலும் மூகாம்பிகை கோயில், முருகர் கோயில் செல்வது பாராட்டுக்கூடிய விஷயம். இதுதான் நம்முடைய கலாச்சாரம். நாம் வேளாங்கண்ணி கோவில், நாகூர் தர்கா, திருப்பதி கோயில் சொல்வோம். இதுதான் இந்தியாவினுடைய மத நல்லிணக்கம்.

ரங்கராஜ் பாண்டே பேட்டி:
அதை தான் முதல்வர் விஜய் செய்கிறார். அதை குறை சொல்லவும் கேள்வி கேட்கவும் யாருக்குமே உரிமை கிடையாது. அதேபோல் அவர் பேட்டி கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். பேட்டி கொடுத்தே தீர வேண்டும் எந்த சட்டத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்? பாண்டு சும்மா இருக்கிறான், பேட்டி கொடுக்கிறான். அதனால் அவரும் பேட்டி கொடுக்கணும் என்று கேட்க முடியுமா? ஜெயலலிதா அம்மா பேட்டி கொடுத்தார்களா? பேட்டி கொடுத்த ஸ்டாலினை முதல்வராக உட்கார வைத்து விட்டீர்களா? என்கிறார்.

விஜய் பற்றி சொன்னது:
உடனே தொகுப்பாளர் மோடி பேட்டி கொடுப்பதில்லை. ஆனால், அவர்களுக்கு கீழ் இருக்கும் அமைச்சர்கள் எல்லாம் பேட்டி கொடுக்கிறார்கள் என்று சொல்கிறார். உடனே ரங்கராஜ், அதே போல் தான் தவெகவில் இருக்கும் அமைச்சர்கள் நிறைய பேர் பேட்டி கொடுத்திருக்கிறார்கள். விஜய் பேட்டி கொடுக்கணுமா? வேலை செய்யணுமா? அவர் வேலை செய்யவில்லை என்றால் தான் கேள்வி கேட்கணுமே தவிர பேட்டி கொடுக்கவில்லை என்று கேள்வி கேட்கக்கூடாது. எல்லாருமே பேட்டி மட்டுமே கொடுத்திருந்தால் வேலை யார் பார்ப்பது? வேலையில் குறை இருந்தால் மட்டும்தான் நாம் கேள்வி கேட்க முடியும் என்று கூறி இருக்கிறார்.






