500 ஆண்டு பிரச்னை தீர்த்துவிட்டதாகச் சொல்றாரு. ஆனா – ராமர் கோவில் குறித்த ரஜினியின் பேச்சுக்கு ரஞ்சித் எதிர்ப்பு.

0
155
- Advertisement -

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா குறித்து இசை வெளியீட்டு விழாவில் பா ரஞ்சித் கூறியிருக்கும் கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பா.ரஞ்சித். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றிருக்கிறது. பெரும்பாலும் இவர் ஜாதிகளை மையமாக வைத்து தான் படங்களை கொடுத்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் தற்போது பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ப்ளூ ஸ்டார். இந்த படத்தை இயக்குனர் ஜெயக்குமார் இயக்கியிருக்கிறார் இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உட்பட பல நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை ராயப்பேட்டை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றிருக்கிறது.

- Advertisement -

விழாவில் பா.ரஞ்சித் பேசியது:

இந்த விழாவில் கலந்து கொண்ட பா ரஞ்சித், இன்றைக்கு முக்கியமான நாள். வீட்டில் யாரும் கற்பூரம் ஏற்ற வில்லை என்றால் கூட எல்லோரும் தீவிரவாதிகள் தான். அந்தளவுக்கு பயங்கரமாக தீவிரமான காலகட்டத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கின்றது. இன்னும் 5, 10 ஆண்டுகளில் நாம் எவ்வளவு மோசமான ஒரு இந்தியாவில் இருக்கப் போகிறோம் என்று பயம் இருக்கிறது.

பயமான காலகட்டத்தில் நுழைவதற்கு முன்னர் நம்மை சரி செய்வதற்கும் நம் மனதை பண்படுத்துவதற்கு நம் மூலையில் ஏற்றி வைத்திருக்கும் பிற்போக்குத்தனத்தையும் மதவாதத்தையும் அளிக்கும் கருவியாக இந்தக் சினிமா கலையை பயன்படுத்தி வருகிறோம்.மக்களிடம் எளிதாக சென்றடைய கூடியது இந்த சினிமா தான். நம்பிக்கையுடன் தான் வேலை செய்து வருகிறோம். இந்தியாவை மோசமான காலகட்டத்தில் இருந்து தள்ளிவிடாமல் இருக்க நம்மால் முடிந்ததை முழுக்க முழுக்க செய்வோம் என்று பேசி இருந்தார்.

-விளம்பரம்-

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஞ்சித், இன்று இந்தியா முழுவதும் ராமர் கோயில் திறப்பு விழாவை கொண்டாடுகிறார்கள். இதை நான் தவறு என்று சொல்லவில்லை. அதற்கு பின்னிருக்கும் மத அரசியலை தான் கண்டிக்கிறேன். பிரபலங்கள் பலரும் கோயிலுக்கு செல்வது அவரவர்கள் விருப்பம். அதை நான் குறை கூறவில்லை. அதற்கு பின்னால் நடக்கும் மதவாதத்தையும், பிற்போக்கு தன்மையையும் தான் கண்டிக்க வேண்டும். இதை அனைவரும் புரிந்து செயல்பட வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர் ‘ ரஜினிகாந்த் இந்த ராமர் கோயில் திறப்புக்கு போவது அவரோட விருப்பம். அவர் ஏற்கெனவே அவரோட கருத்தை முன் வச்சிருக்கார். அவர் 500 ஆண்டு பிரச்னை தீர்த்துவிட்டதாகச் சொல்றாரு. ஆனா, அந்த பிரச்னைக்கு பின்னாடி இருக்கிற அரசியலை கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இருக்கு. அவர் பேசிய விஷயங்கள் சரி, தவறுங்கிறதைத் தாண்டி அதுல எனக்கு விமர்சனம் இருக்கு.” என்றும் கூறியுள்ளார்.

Advertisement