விளக்கு அணைந்து விட்டால் ஜாதி இல்லை – கமலின் பேச்சுக்கு ரஞ்சித்தின் எதிர் கருத்து.

0
1029
ranjith
- Advertisement -

சினிமாவால் ஜாதில் இல்லை என்று கமல் பேசிய கருத்துக்கு நேர் எதிராக கருத்து கூறும் வகையில் ‘சாதி வேறுபாடுகள் திரைப்படத்துறையில் உள்ளது எனும் எனது நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளேன் என இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்து உள்ளர்.இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்திருக்கும் படம் சில நேரங்களில் சில மனிதர்கள். பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் வாரப் பத்திரிக்கை ஒன்றில் எழுதிய அக்னி பிரவேசம் என்ற சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் சில நேரங்களில் சில மனிதர்கள்.

-விளம்பரம்-

இது 1977 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில் ஸ்ரீகாந்த், லக்ஷ்மி நடித்திருந்தார்கள். பீம்சிங் இயக்கியிருந்தார். தற்போது இதே தலைப்பில் அசோக்செல்வன், அபி ஹசன், அஞ்சு குரியன், நாசர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.மேலும், எழுத்தாளர் ஜெயகாந்தனின் வாரிசுகள் தங்கள் தந்தையின் அடையாளங்களில் ஒன்றான இந்த தலைப்பை மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது என்று மறுப்பு தெரிவித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அஜ்மல் கான் தயாரித்திருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இந்த விழாவில் உலக நாயகன் கமலஹாசன் கலந்து கொண்டிருந்தார்.

- Advertisement -

சினிமாவுக்கு ஜாதி, மதம் எல்லாம் கிடையாது :

அப்போது அவர் தெரிவித்த கருத்துக்கு இயக்குனர் பா ரஞ்சித் மறுப்பு தெரிவித்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமலஹாசன் கூறியது, ஆர்வம் திறமை இல்லாமல் சினிமாவில் யாராலும் சாதிக்க முடியாது. சினிமாவுக்கு ஜாதி, மதம் எல்லாம் கிடையாது. சிலர் இந்த கருத்தை ஏற்க மறுப்பார்கள்.

விளக்கு அணைந்து விட்டால் ஜாதி இல்லை :

இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. திரையரங்களில் விளக்கை அணைத்து விட்டால் அங்கு ஜாதி எல்லாம் காணாமல் போய்விடும். அதனால் தான் சினிமாவில் எதை சொன்னாலும் எச்சரிக்கையுடன் சொல்கிறோம். எங்களைப் பார்த்து புதிதாக வருபவர்கள் வியந்து விட வேண்டாம். நாங்கள் செய்த தவறுகளை கண்டறிந்து அதை நீங்கள் செய்யாமல் இருங்கள் என்று கமலஹாசன் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

கமல் கருத்தை ஏற்காத ரஞ்சித் :

இந்நிலையில் கமலின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா ரஞ்சித் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, கமலஹாசன் சார் திரைப்படத்துறையில் ஜாதி மதம் எல்லாம் இல்லை கிடையாது என்று சொல்லியிருந்தார். ஆனால், திரைப்படத்துறையில் ஜாதி மத வேறுபாடு கண்டிப்பாக உள்ளது என்பதை நான் தெளிவாகச் சொல்கிறேன். அதை என்னால் உணரவும் முடிகிறது என்று கமலஹாசன் சார் சொன்னதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இவர் பேசிய கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக பா ரஞ்சித் திகழ்கிறார்.

நட்சத்திரம் நகர்கிறது

இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து மெட்ராஸ் என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார். அதற்கு பிறகு ரஜினிகாந்தை வைத்து கபாலி எனும் பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கி உலக அளவில் பிரபலமானார். பின் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. தற்போது இவர் நட்சத்திரம் நகர்கிறது படத்தை தயாரித்து இருகிறார்.

Advertisement