புஷ்பா பிரஸ் மீட்டில் ஆடையால் தர்ம சங்கடத்திற்கு ஆளான ராஷ்மிகா – வைரல் வீடியோ.

0
1017
rashmika
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த புஷ்பா திரைப்படம் கோடிகளில் வசூலை குவித்து வருகிறது . இயக்குனர் சுகுமார் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்துள்ளனர். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

-விளம்பரம்-

புஷ்பா மாபெரும் வெற்றி :

ஆந்திர பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. அதோடு படத்தில் அல்லு அர்ஜுன் அவர்கள் லாரி டிரைவராக நடித்து இருக்கிறார். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் புஷ்பா பட நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகா மந்தனா கவர்ச்சியாக கருப்பு நிறத்தில் ஆடை ஒன்றை அணிந்து வந்திருந்தார்.

- Advertisement -

ஆடையில் ஏற்பட்ட தர்ம சங்கடம் :

இந்த ஆடையால் ராஷ்மிகா மந்தனா நிகழ்ச்சியில் தர்ம சங்கடத்திற்கு உள்ளானார் என்றே சொல்லலாம். அவரின் உடையால் உட்காரும் போது பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் கருப்புக்கோர்ட்டை தன் காலின் மேல் போட்டு மறைத்தார். தற்போது அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு ஏன் இப்படி எல்லாம் போடணும்? இப்படி வந்து கஷ்டப்படனும் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் இவர் வாய்யா சாமி என்ற பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வவேற்கப்பட்டு இருந்தாலும் இந்த பாடலில் ராஷ்மிகா மந்தனா படு கவர்ச்சியாக நடித்து உள்ளார். பின் அல்லு அர்ஜூனுடன் ஒரு காட்சியில் மிக நெருக்கமாக நடித்து இருக்கிறார். இதனால் குடும்பத்துடன் சென்று படம் பார்ப்பதற்கு சங்கடமாக இருக்கிறது என்றும்,அந்த காட்சியை தூக்க வேண்டும் என்றும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

நீக்கப்பட்ட ராஷ்மிகா காட்சிகள் :

இதனால் படக்குழு அந்த காட்சியை நீக்கி உள்ளதாக அறிவித்து இருந்தது. தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானார். இந்த படம் பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது.

புஷ்பா 2 :

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் புஷ்பா படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை சுகுமார் இயக்கி உள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது. முதல் பாகம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் மிகுந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement