இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் கிட்டும். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான சூழல் உருவாகும். ஆரோக்கியத்தில் சிறு கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வணங்கி வழிபட நன்மைகள் பெருகும்.