லியோ வெற்றிவிழாவிற்கு பின் ரத்னகுமார் குமார் எடுத்த திடீர் முடிவு – ரஜினி ரசிகர்கள் தான் காரணமா?

0
383
- Advertisement -

லியோ படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் ரத்தினகுமார் பேசியிருக்கும் சர்ச்சை கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படத்தின் வெற்றி விழா குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் 540 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஆக மொத்தம் படம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் லியோ வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் லியோ வெற்றியை சிறப்பாக கொண்டாட செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் முடிவு செய்தது. அந்த வகையில் நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வெற்றி விழாவை நடத்தி இருக்கிறார்கள். இதற்கு முதலில் அனுமதி கேட்டு காவல்துறையிடம் தயாரிப்பு நிறுவனம் கடிதம் அளித்து இருந்தது.

- Advertisement -

லியோ வெற்றி விழா:

பின் நேரு உள்விளையாட்டு அரங்கு பராமரிப்பாளர்களிடமும் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தார்கள்.
அவர்கள் அந்த கடிதத்தை நிராகரித்து ஈமெயிலில் அனுப்புமாறு அறிவுறுத்தி இருந்தார்கள். பின் மீண்டும் அனுமதி கடிதத்தை இமெயில் மூலம் அனுப்பப்பட்டிருந்தது. பின் பல பிரச்சனைகளுக்கு லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டு இருக்கிறது. இந்த விழாவில் விஜய், லோகேஷ், திரிஷா உட்பட படக் குழுவினர் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

விழாவில் ரத்தினகுமார் சொன்னது:

மேலும் இந்த படத்திற்கு வசனம் எழுதியவர் இயக்குனர் ரத்தினகுமார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரத்னகுமார், எனக்கு சினிமா ஆசை வர காரணமே விஜய் தான். அவருடைய வாழ்க்கை மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். விஜய் எப்போதும் எல்லோரையும் சமமாக தான் நடத்துவார். எல்லாத்தையும் தாண்டி எவ்வளவு உயர பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தான் ஆக வேண்டும் என்ற சர்ச்சையான கருத்தை பேசி இருக்கிறார். இவர் இப்படி கூறியதற்கு காரணம் ஏற்கனவே ஜெயிலர் படத்தின் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த் அவர்கள், காக்கா- கழுகு கதை சொல்லியிருந்தார்.

-விளம்பரம்-

ரசிகர்கள் கண்டனம்:

அதற்கு ரசிகர்கள் பலரும் காக்கா என்று விஜய் தான் குறிப்பிட்டு ரஜினி பேசியிருந்ததாக சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் கிளம்பி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் ரத்தினகுமார், எவ்வளவு உயர பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தான் ஆக வேண்டும் என்று கழுகை குறிப்பிட்டு பேசியிருந்தது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் விஜய் முன்பு இப்படியெல்லாம் ரத்னகுமார் பேசியிருக்கக் கூடாது என்றும் கூறுகிறார்கள்.

ரத்தினகுமார் பதிவு:

இதனை அடுத்து ரத்தினகுமார் தன்னுடைய இன்ஸ்டாகிராமில், எழுத்து பணி உள்ளதால் நான் ஆஃப்லைனுக்கு செல்லவுள்ளேன். என்னுடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பு வரும் வரை சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிது காலத்திற்கு இடைவெளி எடுக்க போகிறேன். விரைவில் சந்திப்போம் என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் சோசியல் மீடியாவில் இருந்து வெளியேறுவதற்கு காரணம் லியோ பட வெற்றி விழாவில் இவர் பேசிய சர்ச்சை கருது தான் என்றும் கூறி வருகின்றனர்

Advertisement