உண்மையான ‘மாமன்னன்’ இவர்தானா ? – மாரிசெல்வராஜ் கையில் எடுத்த அரசியல்.

0
1660
- Advertisement -

மாமன்னன் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் முன்னாள் சபாநாயகர் தனபாலின் வாழ்க்கையை தழுவியது என்று எழுந்த சர்ச்சைக்கு மாரி செல்வராஜ் கொடுத்திருக்கும் பதிலடி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018ல் வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படமும் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

- Advertisement -

மாமன்னன் படம்:

இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். நேற்று உதயநிதியின் மாமன்னன் படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடிங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்றும் அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன்.

படம் குறித்த தகவல்:

இதில் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும் அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை இயக்குனர் சொல்லி இருக்கிறார். மேலும், இன்று மாமன்னன் படம் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் திரையரங்களில் வெடி வைத்தும் ஸ்வீட் கொடுத்தும் கொண்டாடி வருகிறார்கள். மேலும், இந்த படத்தை பார்த்த கமல்,தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் மாமன்னன் பட குழுவிற்கு பாராட்டி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் மாரி செல்வராஜ்க்கு வாழ்த்து கூறியிருந்ததாக கூறப்படுகிறது

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியம் திரையரங்குகளில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்து இருக்கிறார். அப்போது செய்தியாளர்கள் உதயநிதி ஸ்டாலினிடம், படத்தில் சமூக நீதி இருந்தாலும் நிஜத்தில் வேங்கை வயல் சம்பவம் போல் நடக்கிறது என்று கேட்டிருந்தார்கள். அதற்கு உதயநிதி, மக்கள்தான் மாறவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மாரி செல்வராஜ் விளக்கம் :

இவரை அடுத்து மாரி செல்வராஜிடம் அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலின் வாழ்க்கையை தழுவி மாமன்னன் படம் எடுக்கப்பட்டதா? திரைப்படத்தில் வடிவேலு உடைய கதாபாத்திரம் முன்னாள் சபாநாயகர் தனபாலினை ஓத்து போகிறாதா? என்று கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு மாரி செல்வராஜ், அதனை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று கூறி இருக்கிறார். தற்போது மாரி செல்வராஜின் இந்த பதில் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement