விமானப்படையினரிடம் வசமாக சிக்கிய விஜய் – ‘பீஸ்ட்’ படத்தின் லாஜிக் ஓட்டைகளை சுட்டிக்காட்டி வறுத்தெடுத்த ரியல் பைலட்ஸ்.

0
637
beast
- Advertisement -

விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பீஸ்ட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ட்விட்டரில் திடீரென்று தற்போது உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் முடி சூடா மன்னனாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் பீஸ்ட். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இந்த படம் பேன் இந்திய படமாக வெளியாகி இருந்தது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். படத்தில் ஒரு மால்-லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். எதர்ச்சையாக கடத்தப்படும் மால்-லில் விஜய் சிக்கிக் கொள்கிறார். இறுதியில் விஜய், மால்-லையும், மக்களையும் எப்படி காப்பாற்றினார்? என்பது தான் படத்தின் மீதி கதை. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என்று சிலர் கூறி இருக்கிறார்கள். மேலும், பீஸ்ட் படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு முதலில் திரையரங்களில் வெளியான இந்த படம் தற்போது நெட்பிளிக்ஸ், சன் நெக்ஸ்ட் ஆகிய தளங்களிலும் வெளியாகியிருக்கிறது.

இதையும் பாருங்க : உன்ன மாதிரி ஆளுங்களாலதா பொண்ணுங்களுக்கு அந்த பிரச்சனை – தன் டான்ஸ் வீடியோவிற்கு அட்வைஸ் செய்த பெண்ணை செஞ்சிவிட்ட விஜி.

- Advertisement -

பீஸ்ட் படம் குறித்த தகவல்:

மேலும், ஓடிடியில் இந்தி, தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இப்படம் டப் செய்யப்பட்டு உள்ளதால் நாடு முழுவதிலும் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் உலக அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுஎன்னவென்றால், ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை விமானி சிவராமன் சஜ்ஜன் வெளியிட்ட டுவிட்டர் தான் பீஸ்ட் டிரெண்டிங்க்கு காரணம் என்று சொல்லலாம். ஏன்னா, திரைப்படத்தில் ரா உளவுத்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் விஜய் நடித்து இருப்பார். கிளைமாக்ஸில் தன்னந்தனியாக பாகிஸ்தானுக்கு ஜெட் விமானத்தில் சென்று பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தலைவனை பிடித்து வருவார்.

சிவராமன் சஜ்ஜன் டீவ்ட்:

அப்போது பாகிஸ்தான் போர் விமானங்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இருந்து விஜய் சூசகமாக தப்பித்து வருவது போல காட்சி வரும். இந்த சீனை வீடியோவாக கேப்டன் சிவராமன் டுவிட்டரில் வெளியிட்டு கூறியிருப்பது, இதில் எனக்கு ஏராளமான கேள்விகள் இருக்கின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த ட்விட்டை தான் தற்போது நெட்டிசன்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர். அதுவும் இந்திய அளவில் ட்ரண்ட் ஆன இந்த டீவ்ட் ஒரு கட்டத்துக்கு மேல சர்வதேச அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. ஏனென்றால், பொதுவாகவே போர் விமானங்களை இயக்கும் பயணிகள் ஆக்சிஜன் மாஸ்க்கும், ஹெல்மெட்டும் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

-விளம்பரம்-

நெட்டிசன் கிண்டலுக்கு காரணம்:

ஏனெனில் ஜெட் விமானம் செல்லும் வேகத்தில் நமக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். மேலும், காற்றின் வேகத்திலும், ஜெட்டின் ஒலியிலும் காது சவ்வு கிழிந்து விடும். இதன் காரணமாகவே ஆக்ஸிஜன் மாஸ்க் மற்றும் ஹெல்மெட் விமானிகள் அணிந்து இருப்பார்கள். ஆனால், குறிப்பிட்ட சீனில் விஜய் எதையுமே அணிந்து இருக்கமாட்டார். இது சாத்தியமே இல்லாதது. அதே போல எதிரிகளின் தாக்குதலிலிருந்து தப்பித்து வரும் விஜய்யை பார்த்து எதிரே மற்றொரு மற்றொரு ஜெட்டில் வரும் பெண் விமானி சல்யூட் அடிப்பார். அதற்கு விஜய்யும் பதில் சல்யூட் அடிப்பார்.

கேலி கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்:

சாதாரணமாக ஒரு ஜெட் விமானம் மணிக்கு 1500 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். அந்த வேகத்தில் செல்லும்போது எதிரே ஒரு ஜெட் விமானம் உள்ளிட்ட எந்த ஒரு விமானமும் மைக்ரோ வினாடிகளில் கடந்து சென்றுவிடும். அப்படி இருக்கும் போது எதிரே வரும் விமானிக்கு சல்யூட் அடிப்பது எல்லாம் ரொம்ப ஓவர். இதை தான் நெட்டிசன்கள் பலரும் உலக அளவில் கிண்டல் செய்து கலாய்த்து வருகின்றனர். அதோடு படத்தில் லாஜிக் மீறல் இருக்கலாம் தவறில்லை. ஆனால், லாஜிக்கே இல்லாமல் இருப்பது தவறு என்றும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். இப்படி தொடர்ந்து பீஸ்ட் படத்தை குறித்து மீம்ஸ் போட்டு தற்போது சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement