தமிழ் சினிமா உலகில் காமெடியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. சினிமா உலகில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு 23 ஆம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். பின் இடையில் சில பிரச்சனைகளால் சமீப காலமாக இவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். நடிகர் ராஜ்கிரனால் அறிமுகம் செய்யப்பட்டு தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்திலுக்கு பிறகு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டவர் காமெடி நடிகர் வைகைபுயல் வடிவேலு என்று பலரும் அறிந்த ஒன்று.
ஆனால், வடிவேலுவுக்கு ஒரு மிகப்பெரிய ரோல் கிடைத்தது என்னவோ சின்னக்கௌண்டர் படத்தில் தான். அந்த படம் முழுதும் விஜயகாந்திற்கு குடை பிடித்து வருவார் வடிவேலு. அதன் பின்னர் விஜயகாந்தின் பல படங்களில் நடித்தார் வடிவேலு. ஆனால், வடிவேலு சினிமாவில் இருந்து காணமல் போனதற்கு காரணமும் கேப்டன் தான். பத்தாண்டுகளுக்கு முன் தேர்தல் பிரசாரத்தில் திமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்திருந்த வடிவேலு, அதன்பிறகான நிகழ்வுகளால் மனம் நொந்து போனார்.
இதையும் பாருங்க : இரண்டாம் முறையாக கொரோனா தடுப்பூசி போட்ட பார்த்திபனுக்கு கண்,மூக்கு, காதில் ஏற்பட்டுள்ள பாதிப்பு.
இவர் திமுகவுக்காக பிரசாரம் செய்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று விட்ட நிலையில், தொடர்ந்து வடிவேலுவை படங்களுக்குக் கமிட் செய்வதில் தயாரிப்பாளர்கள், மற்றும் இயக்குநர்கள் தயங்கியதாலேயே நடிப்பிலிருந்து ஒதுங்க வேண்டிய நிலை வந்தது. வடிவேலு திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக நினைத்து விஜயகாந்தை மிகவும் கேவலமாக பேசினார். இப்படி ஒரு நிலையில் தான் வடிவேலுவை விஜயகாந்தின் ஆட்கள் அடித்துள்ளார்கள் என்று பிரபல நடிகர் தியாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகர் தியாகு விஜயகாந்துக்கு மிகவும் நெருங்கிய நண்பர். விஜயகாந்தை இன்னும் வாடா போடா என்று கூப்பிடும் வெகு சிலரில் தியாகவும் ஒருவர். இப்படி ஒரு நிலையில் அந்த பேட்டியில் பேசியுள்ள தியாகு, வடிவேலு வீட்டிற்கு எதிரில் இருக்கும் விஜயகாந்தின் உறவினர் ஒருவர் இறந்துவிட்டாராம். அப்போது அந்த சாவிற்கு சென்ற விஜயகாந்தின் உறவினர்களின் கார் வடிவேலு வீட்டின் முன்னாள் நிற்க வைக்கப்பட்டதை பார்த்து வடிவேலு அவர்களிடம் சண்டைக்கு என்றுள்ளார். அப்போது வடிவேலு ஏதோ சொல்லிவிட வடிவேலுவை செம அடி அடித்துவிட்டார்கள். விஜயகாந்தின் ஆட்கள் வடிவுலுவை அடித்த போது இவருக்கு தான் வடிவேலு போன் செய்ததாகவும், உடனே இவர் கலைஞருக்கு போன் செய்து வடிவேலுவை காப்பற்றியதாவும் கூறியுள்ளார்.