இரண்டாம் முறையாக கொரோனா தடுப்பூசி போட்ட பார்த்திபனுக்கு கண்,மூக்கு, காதில் ஏற்பட்டுள்ள பாதிப்பு.

0
1487
- Advertisement -

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. பாலிவுட்டின் டாப் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி மலையாள நடிகர் பிருத்விராஜ் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனுமான நடிகர் ராம்சரண் நடித்த ரகுள் பிரீட் சிங் நிக்கி கல்ராணி தமன்னா என்று பல்வேறு தளங்கள் கொரோனா தொட்டால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்கள்.

-விளம்பரம்-

அதே போல தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஷால் மற்றும் அவரது தந்தை, சரத் குமார், கருணாஸ் என்று பல நடிகர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தனர். சமீபத்தில் நடிகர் சூர்யா கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார். கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க பலரும் தடுப்புஊசிகளை போட்டுக்கொண்டாலும் மீண்டும் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக பலர் கூறினார்கள்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் கொரோனா தோற்று தடுப்பூசி எடுத்துக்கொண்ட பார்த்திபனுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தலில் வாக்களிக்கும் விழுப்புணர்வாக நடிகர் பார்த்திபன் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில், சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ‘நாளை என்பது ஒரே ஒரு நாள் அல்ல… ஐந்தாண்டு கால குத்தகை!’ என்று சுட்டுரையில் பதிவிட்டிருந்த பார்த்திபன், வாக்களித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார்.

சமீபத்தில் தான் நடிகர் பார்த்திபன் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். இப்படி ஒரு நிலையில் இரண்டாம் முறையாக கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது. இதனால் வருத்தமும்,இயலாமையும். முகம் முழுவதும் வீங்கிவிட்டது. டாக்டருக்குக் போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துக்கொண்டேன். எனவே அனைவரும் கரோனா தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்
மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற எதிர்வினைகள் ஏற்படும். அதுவும் எனக்கு ஏற்கனவே ஒவ்வாமை பிரச்னை இருந்ததால் மட்டுமே அதிகமானது என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement