AR என்றால் என்ன ? ரஹ்மான் சொல்லிய காரணம் – காஞ்சனா என்ற தனது பெயரையும் AR ரெஹேனா என்று மாற்றிக்கொண்ட அவரின் அக்கா.

0
511
- Advertisement -

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் பிறப்பால் ஒரு இந்து ஆனால் இஸ்லாத்திற்கு மாறியவர் என்பது பலரும் அறிந்த ஒன்று. ரஹ்மானின் இயற் பெயர் திலீப் குமார். ஏ.ஆர்.ரஹ்மான் தனது முதல் படமான ரோஜா வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவிய பின்னர் திலீப் குமார் என்ற பெயரை மாற்றிக்கொண்டார். ஆனால், அதற்கு பின்னால் ஒரு பெரிய காரணமும் இருக்கிறது. இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மனுக்கு இசை என்பது ரத்தத்தில் ஊறிய ஒரு விஷயம், அதற்கு காரணம் அவரது தந்தை ஆர் கே சேகர் ஒரு இசையமைப்பாளர் தான்.1976 ஆம் ஆண்டு தன்னுடைய 40 வயதில் ஆர்கே சேகர் இறந்துவிட்டார். 6 January 1967

-விளம்பரம்-

ஆர் கே சேகர் ஆரம்பத்தில் இவர் மேடை நாடகங்களில் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு தான் மலையாள சினிமாவில் நுழைந்தார். முதலில் இவர் பலருக்கும் உதவியாளராக இருந்து அதற்குப்பின் 1964ல் வெளிவந்த பழசி ராஜா என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார். அந்த படத்தின் பாடல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது.அதன்பின் இவர் ஒரு சில படங்களுக்கு இசையமைத்து இருந்தார்.

- Advertisement -

பின் ஏழு வருடங்கள் கழித்து தான் இவர் மீண்டும் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கினார். முதலில் சில படங்கள் நன்றாக அமைந்தது. பின் இவர் இசையமைத்த படங்கள் எல்லாம் தோல்வி அடைந்தது. இதனால் இவர் எம்பி ஸ்ரீனிவாசன், தக்ஷிணாமூர்த்தி போன்ற பல இசையமைப்பாளரிடம் உதவியாளராக பணிபுரிந்தார். 1976 ஆம் ஆண்டு தன்னுடைய 40 வயதில் ஆர்கே சேகர் இறந்துவிட்டார்.

அப்போது திலீப் குமாரின் வயது 9 தான். இவரது இறப்பிற்கு பின்னர் தான் திலீப் குமார் ரஹ்மானாக மாறியது. சரி, திலீப் குமார் ரஹ்மான் என்று மரியதாக இருக்கட்டும். ஆனால், ரஹ்மானின் தந்தை பெயர் ஆர் கே சேகர் – அப்படி இருக்க ரஹ்மானின் இனிஷில் எஸ் என்று தானே இருந்திருக்க வேண்டும் ஏன் AR என்று ஆனது என்ற கேள்வி பலருக்கும் எழலாம். AR என்றால்  Allah Rakha அதாவது கடவுளை குறிக்கும் ஒரு சொல்.

-விளம்பரம்-

மேலும், இதுகுறித்து அவரது அக்காவும் கேள்வி எழுப்பி இருக்கிறார். ரஹ்மானின் அக்கா, அதாவது ஜி வி பிரகாஷின் அம்மாவின் உண்மையான பெயர் காஞ்சனா. இவரும் தனது தந்தையின் இறப்பிற்கு பின்னர் தான் தனது பெயரை ரெஹானா என்று மாற்றிக்கொண்டார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர் ‘ என் தந்தை இறந்த பின்னர் எங்கள் குடும்பம் பல கஷ்டங்களை சந்தித்து. அதன் பின்னர் அம்மா சூஃபித்துவத்தால் கடுமையாக ஈர்க்கப்பட்டர் , முழு குடும்பமும் மதம் மாறியது.

ஆனால் நான் மதம் மாற பத்து வருடங்கள் எடுத்தேன். நான் அதை அவசரப்படுத்த விரும்பவில்லை. எல்லா சம்பிரதாயங்களையும் கடைப்பிடித்து, ஐந்து வேளை நமாஸ் செய்யும் பழக்கத்தைப் பெற எனக்கு இன்னும் பத்து வருடங்கள் தேவைப்பட்டன. எனது பெயரை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ​​முதலில் ஷனாஸைப் பற்றி நினைத்தேன், ஆனால் ரைஹானா என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் ரைஹானா சேகர் ஆனேன்.

நான் அப்பாவுடன் தொடர்ந்து இணைந்திருக்க விரும்பினேன், அதனால் அவர் பெயர் என் பெயரின் ஒரு பகுதியாக மாறியது.நான் ஏஆர் ரைஹானாவாக இருக்க வேண்டும் என்று இசைத்துறை விரும்புகிறது, அது சரியா என்று ரஹ்மானிடம் கேட்டபோது, ​​‘ஏ ஆர்’ என்றால் ‘கடவுளின் பெயர்/கடவுளின் பெயரை வைத்தது’ என்று கூறினார். அதன் பின்னர் தான் ரைஹானா சேகர் சேகர் என்ற பேயர் Ar ரைஹானாவாக மாறியது என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement