காருக்கு வரி கட்ட அமலா பால் செய்த தில்லு முள்ளு !

0
1370
Amala Paul
- Advertisement -

நடிகை அமலாபால், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடெஸ் ‘எஸ்’ ரக காரை வாங்கினார். கேரளாவைச் சேர்ந்த அவர், காரை அங்கே பதிவுசெய்தால், ரூ. 20 லட்சம் வரி கட்ட வேண்டும்.
Amala Paulஅதனால், புதுச்சேரியில் பதிவுசெய்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே, அங்கு கார் பதிவுசெய்ய முடியும். அமலாபாலின் மெர்சிடெஸ் கார், புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள புனித தெராசா தெருவைச் சேர்ந்த இன்ஜினீயரிங் படித்துவரும் இளைஞர் ஒருவரின் பெயரில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அந்த இளைஞருக்கே தெரியாமல் அவரின் பெயரில் பதிவுசெய்யப்பட்டுள்ளதுதான். ஆகஸ்ட் 4-ம் தேதி, இந்த கார் சென்னையில் உள்ள ட்ரான்ஸ் கார் நிறுவனத்தில் வாங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 9-ம் தேதி, புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Amala Paulபதிவுச் செலவாக 1.75 லட்சம் மட்டுமே ஆகியுள்ளது. இதனால், கேரள அரசுக்கு ரூ.20 லட்சம் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. கேரள மோட்டார் வாகனச் சட்டப்படி, வேறு மாநிலங்களில் கார் பதிவுசெய்யப்பட்டாலும் ஒரு வருடத்துக்குள் கேரளாவில் மீண்டும் பதிவு செய்யப்பட வேண்டும். அப்போது, காரின் விலையில் 20 சதவிகிதம் சாலை வரியாகச் செலுத்த வேண்டும்.

- Advertisement -

இந்த விவகாரம்குறித்து மலையாளச் செய்தி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. அமலாபால் கார் பதிவுசெய்த புதுச்சேரி இளைஞரின் வீட்டுக்குச் சென்று செய்தியாளர்கள் விசாரித்தபோது, ‘அமலாபால் யார் என்றே எங்களுக்குத் தெரியாது’ என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். விஷயம் தெரிந்து, இளைஞரின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Advertisement