பேன்ஸ் மீட்டிங் வைத்தால் அடுத்த தளபதி இடத்தை பிடிக்க முடியுமா? திருப்பூர் சுப்பிரமணியம் ஆவேச பேட்டி

0
710
- Advertisement -

அடுத்த தளபதி குறித்த விவகாரம் தொடர்பாக திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமீப காலமாகவே கோலிவுட்டில் அடுத்த தளபதி யார்? என்ற கேள்வி தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து சோசியல் மீடியாவிலும் பல விவாதங்கள் தொடங்கி இருக்கிறது. இதற்கு காரணம், தளபதி விஜய் அவர்கள் சினிமாவை விட்டு முழுவதுமாக விலகி தன்னுடைய அரசியல் பணியை மேற்கொள்ள இருக்கிறார் என்று அறிவித்திருந்தார்.

-விளம்பரம்-

தற்போது விஜய் அவர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து இவர் கடைசியாக தளபதி 69 என்ற படத்தில் தான் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை யார் இயக்குவார்கள்? என்று எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியினுடைய வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருவதால் இனி விஜய் அவர்கள் சினிமாவில் நீடிப்பதில்லை என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

- Advertisement -

விஜய் அரசியல்:

மேலும், 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் கட்சி போட்டியிட இருப்பதால் அதற்கான வேலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். சமீபத்தில் தான் உறுப்பினர்கள் சேர்க்கைக்காக புது செயலியை தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்து இருக்கிறது. இதனால் தமிழ் சினிமாவில் விஜய்னுடைய இடம் காலியாக இருப்பதால் அடுத்த தளபதி யார்? அடுத்த விஜய் யார்? என்ற விவாதம் ஏற்பட்டிருக்கிறது. பின் தனுஷ், சிம்பு, சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர்களில் ஒருவர் தான் அடுத்த தளபதி என்றெல்லாம் விவாதிக்க தொடங்கி விட்டார்கள்.

அடுத்த தளபதி :

அதில் குறிப்பாக, சிவகார்த்திகேயன் பெயர் தான் அதிகம் அடிபட்டு இருக்கிறது. சமீப காலமாகவே சிவகார்த்திகேயனுடைய நடவடிக்கை எல்லாம் அப்படித்தான் இருக்கிறது என்றெல்லாம் கூறுகிறார்கள். இதை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் சிவகார்த்திகேயன் அவர்கள் பேன்ஸ் மீட் ஒன்றை நடத்தி இருக்கிறார். சென்னையில் நடைபெற்ற இந்த பேன்ஸ் மீட்டில் தமிழகத்தில் உள்ள பல இடங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சிவகார்த்திகேயனை பார்க்க வந்திருக்கிறார்கள். சொல்லப்போனால், விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்குமோ அதே அளவுக்கு நிகராகவே சிவகார்த்திகேயனுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

-விளம்பரம்-

திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி :

மேலும், சிவகார்த்திகேயன் மட்டும் இல்லாமல் சூர்யா, தனுஷ், சிம்பு, விக்ரம், கார்த்தி ஆகிய இவர்களில் அடுத்த தளபதி இடத்தை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், விஜய் உடைய இடத்தை யாராலுமே பிடிக்க முடியாது. என்னைப் பொருத்தவரை சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு, விக்ரம், கார்த்திக் ஆகிய நடிகர்கள் எல்லோருமே இன்னும் ஒரே இடத்தில் தான் இருக்கிறார்கள்.

அடுத்த தளபதி குறித்து சொன்னது:

அதேபோல் என்றென்றும் அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகிய நடிகர்களின் உடைய இடத்தை எவராலும் பிடிக்க முடியாது. ஒருவேளை இனி வரும் காலங்களில் இவர்கள் நல்ல படங்களை கொடுத்தால் வேண்டுமானால் விஜய் உடைய இடத்திற்கு வர முயற்சி செய்யலாம். ஆனால், இப்போதைக்கு விஜய் இடத்தை பிடிப்பதற்கு இவர்களுக்கு வாய்ப்பே இல்லை. மேலிம், இவர்கள் பேன்ஸ் மீட்டிங் வைத்து ரசிகர்களை அழைத்து பேசுவதன் மூலம் விஜய் இடத்தை பிடித்து விட முடியுமா? என்றெல்லாம் பேசி இருக்கிறார்.

Advertisement