தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் உள்ள ரசிகர் பட்டாளம் பற்றி அனைவரும் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அஜித் மற்றும் விஜய் இவர்களின் படம் குறித்து ஏதாவது வெளியானதால் உடனே அதனை ட்விட்டரில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து விடுவார்கள்.
கடந்த மாதம் விஜய் பிறந்தநாளை ரசிகர்கள் படு கோலமாக கொண்டாடி வந்தனர். அதே போல விஜய் பிறந்தநாளுக்காக விஜய் ரசிங்கர்கள் பல ஹேஷ் டேகுகளை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் #ThalapathiBdadyCpd என்ற ஹேஷ் டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. அதே போல #June22VijayDeathday என்ற மோசமான ஹேஷ் டேக்கும் வைரலானது.
இந்த நிலையில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அஜித் ரசிகர்கள் #ஆகஸ்ட்8_தலதரிசனம் என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரண்ட் செய்தனர். ஆனால், அதற்கு எதிர்மறையாக #ஆகஸ்ட்8_பாடைகட்டு ஹேஷ்டேக் ட்ரண்ட் செய்யப்பட்டது.
இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள், IPActorVijay என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கிலும் வந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். ஆனால், #LongLiveVIJAY என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் இந்திய அளவில் டாப் ட்ரெண்ட் செய்துள்ளனர். இதனை பல்வேறு பிரபலங்களும் பயன்படுத்தி வருகின்றனர்.