ஜீ தமிழில் அண்ணா சீரியல் ஒளிபரப்பாகுவதற்கு முன்பே நடிகை மாற்றப்பட்டு இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனாலே புது புது கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது அண்ணா என்ற புது சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்த தொடரில் மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடிக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர்ஹிட் கொடுத்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் 2 என்ற சீரியலில் நடித்திருந்தார்.
அண்ணா சீரியல்:
அந்த சீரியல் கடந்த வருடம் தான் முடிவடைந்தது. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் அண்ணா என்ற தொடரில் நடிக்க இருக்கிறார். அதற்கான புரோமோ எல்லாம் வெளியாகி இருந்தது. மேலும், இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக நித்யா ராம் நடிக்கிறார். இவர் வேற யாரும் இல்லைங்க, சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான்.
அண்ணா சீரியல் குறித்த தகவல்:
மேலும், இந்த அண்ணா சீரியலில் மிர்ச்சி செந்திலுக்கு தங்கையாக பாக்கியலட்சுமி சீரியல் நடித்து வரும் ரித்திகா ஒப்பந்தம் ஆகியிருந்தார். இந்த சீரியலுக்கான பூஜை சமீபத்தில் தான் நடந்தது. இந்த நிலையில் இந்த அண்ணா சீரியலில் இருந்து ரித்திகா விலகியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, அண்ணா சீரியல் இன்னும் டிவியில் ஒளிபரப்பவில்லை.
சீரியலில் விலகிய ரித்திகா:
அதற்குள் ரித்திகா இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். இவர் விலகியதற்கு காரணம் என்ன? என்று தெரியவில்லை. அது மட்டும் இல்லாமல் இவருக்கு பதில் வேறு யார் நடிக்கப் போகிறார்கள்? என்ற தகவலும் இன்னும் வெளியாகவில்லை. தற்போது ரித்திகா சீரியலில் இருந்து விலகிருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. “ராஜா ராணி” என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் ரித்திகா.
ரித்திகா குறித்த தகவல்:
அதன் பின்னர் சிவா மனசுல சக்தி, சாக்கோலேட், திருமகள் என்று பல தொடரில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்யலட்சிமி என்ற சிரியலில் மூலம் ரித்திகா பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி இருக்கிறார். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் இவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.