விசித்ராவிற்கு ஆதரவாக ஐஷுவை கண்டித்து அவருடைய கணவர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 37 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு பரீச்சயமான நபர்களில் ஒருவர் விசித்திரா. இவர் தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர். திருமணத்திற்கு பிறகு விசித்திரா சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இவர் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து விசித்திரா நன்றாக விளையாடி கொண்டு தான் வருகிறார். ஆரம்பத்தில் இவர் ஜோவிகாவிற்கு படிப்பு குறித்து அறிவுரை கூறியிருந்ததற்கு சிலர் விமர்சித்து இருந்தாலும் சிலர் விசித்ராவுக்கு ஆதரவு கொடுத்திருந்தார்கள். அதற்கு பிறகு விசித்திரா எல்லா டாஸ்க்கிலும் நன்றாக ஈடு கொடுத்து விளையாடி வருகிறார். குறிப்பாக, சில தினங்களுக்கு முன் பிரதீப்க்கு ஆதரவாக விசித்ரா பேசியதற்கு சோசியல் மீடியாவில் ஆதரவுகள் அதிகமாகி கொண்டே வருகிறது.
விசித்திராவுக்கு திரண்ட ஆதரவு:
மேலும், பிரதீப் ஆரம்பத்திலிருந்து தவறு செய்து கொண்டு தான் இருக்கிறார். அதை அவனுக்கு சொல்லி இருந்தால் அவன் திருத்திருப்பான். அவனைக் குறித்து கெட்ட இமேஜ் உருவாக்கி அவனை வெளியே அனுப்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவனுக்கும் ஒரு எதிர்காலம் இருக்கிறது என்று விசித்திரா பிற போட்டியாளர்களிடம் ஆர்கியுமென்ட் செய்திருக்கிறார். இதனால் மற்ற போட்டியாளர்கள் விசித்திராவிடம் சண்டைக்கு சென்றிருக்கிறார்கள். அதேபோல அர்ச்சனாவும் பிரதிப்பிற்கு ஆதரவாக விசித்திராவுக்கு துணையாக குரல் கொடுத்திருக்கிறார். இதனால் வீட்டில் கலவரமே வெடித்திருக்கிறது.
விசித்திரா-அர்ச்சனா கூட்டணி :
நேற்று எபிசோடில் மொத்த பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களும் விசித்ரா, அர்ச்சனாவிடம் சண்டைக்கு வந்திருக்கிறார்கள். எல்லோரையும் சமாளித்து இருவரும் நின்று இருக்கிறார்கள். அதிலும் நிக்சன், ஐசு தாறுமாறாக விசித்ராவுக்கு கொஞ்சம் கூட மரியாதை தராமல் பேசி இருக்கிறார். கண்டிப்பாக இந்த வார இறுதியில் கமல் இதை கண்டிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இதன் மூலம் விசித்ராவுக்கு சோசியல் மீடியாவில் பலருமே ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசித்ரா கணவர் பேட்டியளித்து இருக்கிறார்.
விசித்திரா கணவர் பேட்டி;
அதில் அவர், ஜோதிகா படிப்பு குறித்து வனிதா பேசியிருந்தபோதே எனக்கு அதிகமான கோபத்தை ஏற்படுத்தியது இருந்தது. அதற்கு நான் பதில் கொடுத்திருந்தால் அவருக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் இருந்திருக்கும். அதனால் தான் நான் பதில் கொடுக்கவில்லை. நீங்கள் சில நபர்களை, சில நேரங்களில் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் ஏமாற்ற முடியாது. விசித்ரா பிரதீப்பை ஆதரிக்கவில்லை. அதேபோல் பெண்கள் பாதுகாப்பு விஷயம் தொடர்பாக பிரச்சனை எழுப்பியவர்களில் ஐஸ்வர்யாவும், அக்ஷயாவும் உண்டு . இவர்கள் சில தினங்களுக்கு முன்பு பிரதீப்பை கட்டிபிடித்து இருந்தார்கள்.
ஐஷு குறித்து சொன்னது:
அப்போது உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தோன்றவில்லையா? ஏன் அவர் பக்கத்தில் சென்றீர்கள்? இதில் எனக்கு சிரிப்பான விஷயம் என்னவென்றால், ஐஸ்வர்யா இதனை என்னுடைய பெற்றோர்கள் பார்த்துக் கொண்டிருப்பதாக சொன்னார். நேற்று வரை உங்களுடைய பெற்றோர் இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கவில்லையா? நீங்கள் பண்ணிக் கொண்டிருந்த கூத்தை மொத்த உலகமே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர்கள் பார்த்திருக்க மாட்டார்களா? ஐஸ்வர்யா வெளியே வந்தவுடன் அவருடைய குடும்பத்தினர் செருப்பால் அடிப்பார்கள். என்னுடைய பெண்ணாக மட்டும் ஐஸ்வர்யா இருந்ததால் நான் கண்டிப்பாக தண்டித்திருப்பேன் என்று கூறியிருக்கிறார்.