தேசிய வீராங்கனைக்கு ஏற்பட்ட கொடுமை – முன்னாள் MMA பைட்டர் நடிகை ரித்திகா சிங் கருத்து

0
617
- Advertisement -

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் முன்னாள் தலைவராக இருந்தவரின் உறவினர் சஞ்சய் சிங் தான் தற்போது புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், புதிய தலைவராக ஒரு பெண் தான் வரவேண்டும். ஆனால், தலைவர் பதவிக்கான போட்டியாளர்கள் பட்டியலில் ஒரு பெண் கூட இல்லை.

-விளம்பரம்-

பிரிஜ் பூஷனின் உறவினரை தான் தலைவராக தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இது ஏற்றுக் கொள்ள முடியாது. நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என்று கூறியிருக்கிறார். இப்படி சாக்ஷி மாலிக் அளித்திருக்கும் பேட்டி தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பலருவே சாக்சி மாலிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இது தொடர்பாக நடிகை ரித்திகா சிங் தன்னுடைய எதிர்ப்பை instagram ல் பதிவிட்டிருக்கிறார். அதில் அவர், வீராங்கனை சாக்ஷி மாலிக்கை இப்படி பார்க்கும்போது இதயம் வலிக்கிறது. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பெருமை சேர்த்தவர் சாக்ஷிமாலிக். இத்தனை ஆண்டுகள் கடின உழைப்பு, கனவுகளை நம்பிக்கைகளை கைவிட்டு, நான் விலகுகிறேன் என்று அவர் கூறுவது பேரிழவானது.

போராட்டத்தின் போதும் சாக்சி மாலிக் எதிர்கொண்ட அவமரியாதை எல்லாமே கொடுமையானது என்று பதிவிட்டிருக்கிறார். தற்போது ரித்திக் சிங்கின் பதிவிற்கு பலருமே ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஏற்கனவே டெல்லியில் மல்யுத வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு தரப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாஜக எம் பி யும் இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த கூட்டமைப்பு வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இதனை அடுத்து இந்திய மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்திரில் ஒன்று கூடி போராட்டமும் நடத்தி இருந்தார்கள். இதில் சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் போன்ற பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் இவர்களை போலீஸ் கைது செய்து இருந்தார்கள். இது குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்தது.

Advertisement