மூன்றே மாதத்தில் 12 கிலோவை குறைந்துள்ள குக்கு வித் கோமாளி கனியின் கணவர் திரு – அட, இவர் யார் தெரியுமா ?

0
1191
- Advertisement -

மூன்று மாதத்தில் 12 கிலோ எடையை அசால்ட் ஆக இயக்குனர் திரு குறைத்திருக்கும் சீக்ரெட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் திரு. இவர் விஷாலின் நடிப்பில் வெளிவந்திருந்த தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

இதனை அடுத்து இவர் விஷால் நடிப்பில் வெளிவந்திருந்த சமர், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கியிருந்தார். இந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு தான் பெற்றிருந்தது. இதனை அடுத்து கடைசியாக இவர் கார்த்திக், கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்திருந்த மிஸ்டர் சந்திரமௌலி என்ற படத்தை இயக்கியிருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. அதன் பின் இவருடைய இயக்கத்தில் எந்த படமும் வெளியாகவில்லை.

- Advertisement -

இயக்குனர் திரு குறித்த தகவல்:

இதனிடையே இவர் இயக்குனர் அகத்தியனின் மகள் கனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் வேறு யாரும் இல்லைங்க, நம்ம காரக்குழம்பு கனி தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்
பிரபலமான நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் நெருங்கி இருக்கிறது.

கனி குறித்த தகவல்:

மேலும், இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றவர்தான் கனி. இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். இதனை அடுத்து தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய உடல் எடை குறைத்தது குறித்து இயக்குனர் திரு இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

இயக்குனர் திரு போஸ்ட்:

அதில் அவர், நான் மூன்று மாத பிட்னஸ் சேலஞ்ச் எடுத்துக் கொண்டேன். நான் 76 கிலோவிலிருந்து 65 கிலோவுக்கு குறைத்தேன். நான் இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. மூன்று மாத கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, சுய தேடல் என எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. நான் இதனை ஆரம்பித்த போது இந்த அளவுக்கு ரிசல்ட் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் இப்பொழுது பெருமையாக முன்பை விட வலுவானவனாக இருக்கிறேன். நான் தினமும் தினமும் உடற்பயிற்சி செய்ய ரொம்ப கஷ்டப்பட்டேன்.

உடல் எடை குறைப்பு குறித்து சொன்னது:

இடையில் இதை விட்டு விடலாம் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்றெல்லாம் யோசித்திருந்தேன். ஆனால், கனியின் தொடர்ச்சியான ஆதரவு,ஊக்கம்தான் என்னை தொடர்ச்சியாக இந்த உடற்பயிற்சி செய்ய வைத்தது. இதில் நான் கற்றுக் கொண்டது என்னவென்றால், எதையும் மன தைரியத்துடன், உறுதியுடனும் தொடர்ச்சியாக செய்தால் அது நிச்சயம் கிடைக்கும். இந்த பிட்னஸ் பயணத்தில் நீங்கள் எங்கு இருந்தாலும் சிறிய அடியும் பலன் அளிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களை நம்புங்கள் உங்களை சுற்றி நேர்மையான எண்ணம் கொண்டவர்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement