விஜய்க்கு ஜோடியானதும் கண்டு கொள்ளவே இல்லை என்று நடிகை ஒருவரை விமர்சித்து மேடையில் ஆர்ஜே பாலாஜி பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. கடைசியாக விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த படம் லியோ.
இந்த படத்தை லோகேஷ் இயக்கி இருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை செய்திருந்தது. இதனை அடுத்து தற்போது விஜய் அவர்கள் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தில் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, லைலா உட்பட பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது.
மீனாட்சி சவுத்ரி குறித்த தகவல்:
மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்திருக்கிறார். இவர் முதன்முதலாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த கொலை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். அதற்கு பிறகு ஆர் ஜே பாலாஜி நடித்திருக்கும் சிங்கப்பூர் சலூன் இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி நடித்திருக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ், லால், ரோபோசங்கர் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். லோகேஷ்கனகராஜ், ஜீவா கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறார்கள்.
சிங்கப்பூர் சலூன் படம்:
இந்த படத்தை கோகுல் இயக்கி இருக்கிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. மேலும், இந்தப் படத்தை ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் இன்று சிங்கப்பூர் சலூன் படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. அதில் ஆர் ஜே பாலாஜி, சத்யராஜ், விஜய் சேதுபதி உட்பட குழுவினர் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு கதாநாயகி மீனாட்சி சவுத்ரி மட்டும் வரவில்லை.
ட்ரெய்லர் விழாவில் ஆர் ஜே பாலாஜி:
இது தொடர்பாக மேடையில் ஆர் ஜே பாலாஜி, இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகும்போது மீனாட்சி அவர்கள் கொலை என்ற ஒரு படத்தில் தான் நடித்திருந்தார். ஆனால், அந்த படமும் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. முதல் நாள் ஷூட்டிங் வரும்போது பெரிய நடிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று ஆச்சரியமாக பார்த்தார். ஆனால், இப்ப என்னடனா அவங்க ஆடியோ லான்ச்சுக்கு வரவில்லை, ப்ரமோஷனுக்கும் வரவில்லை. விஜய் சார் கூட ஹீரோயினியா நடித்துக் கொண்டிருக்காங்க. என் கண் முன்னாடி பார்த்த ஜாவா சுந்தரேசன் நீங்கதான் மீனாட்சி சவுத்ரி வாழ்த்துக்கள் என்று விமர்சித்து பேசியிருக்கிறார்.
ஆர் ஜே பாலாஜி திரைப்பயணம்:
தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கின்றார் ஆர் ஜே பாலாஜி. இவர் ரேடியோ மிர்ச்சி அலைவரிசை மூலமாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கினார். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் ஆர் ஜே பாலாஜி சினிமாவிற்குள் நுழைந்தார். இவர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம் என்ற படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி பல படங்களில் நடித்தார். சமீப காலமாக இவர் இயக்கி நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.