தன்னை ஜாதி ரிதியாக கிண்டல் செய்த நபருக்கு தக்க பதிலடி கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி !

0
8917
Rj balaji
- Advertisement -

தற்போது சினிமாவில் காமெடி நடிகராக இருந்து வரும் ஆர்.ஜே. பாலாஜி சமூக அக்கறை கொண்ட ஒரு நல்ல மனிதர். கடந்து ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், சென்னை மழை வெள்ளம் போன்ற பல்வேறு சமூக பிரச்சனைகளில் குரல் கொடுத்ததோடு தம்மால் முடிந்த உதவிகளையும் செய்தவர். மேலும் பல சமூக பிரச்சனைகளை மக்களிடம் கொண்டுசென்றவர்.

-விளம்பரம்-

rj balaji

- Advertisement -

சமீபத்தில் தமிழகத்தில் காவேரி மேலாண்மை அமைக்ககோரி கடந்த திங்கட்கிழமை நடந்த சென்னை மற்றும் கொல்கத்தா அணி ipl போட்டியின் போது போராட்டம் நடைபெற்றது.அப்போது தனது பங்கிற்கு ipl போட்டியின் தமிழ் வர்ணனையாளராக இருந்து வந்த பாலாஜி அன்று நடந்த போட்டியில் இருந்து விலகி தன்னுடைய ஆதரவையும் தெரிவித்தார்.

ஆர் ஜே பாலாஜியின் இந்த செயலை பாராட்டி வந்த நிலையில் ட்விட்டரில் சில்லிபையன் என்ற ஒருவர் ஆர் ஜே பாலாஜியை அவரின் ஜாதியை குறிப்பிட்டு தாக்கியுள்ளனர். அந்த நபர் என் ஒன்றை அழுத்தவும்…பக்கத்தில் இருக்கும் பாபானை அழுத்தவும் என்று கூறியிருந்தார்.இதற்கு பதிலளித்த ஆர். ஜே. பாலாஜி நீங்கள் எவ்வளவு தான் எனக்கு ஜாதி மற்றும் அரசியல் முத்திரையை குத்த பார்த்தாலும் அது நீங்கள் எப்படிபட்டவர் என்பதை தான் காட்டுகிறது.

-விளம்பரம்-

நான் எப்படி பிறந்தேன் என்பது என் கையில் இல்லை, இப்போது நான் என்ன செய்கிறேன் எப்படி இருக்கிறேன் என்பது தான் முக்கியம்.உங்கள் பெயரிலேயே இருக்கிறது(சில்லிபையன்) இதெல்லாம் உங்களுக்கு எப்படி புரியும் என்று தக்க பதிலளித்துள்ளார்.

Advertisement