சீரியல் நடிகையுடன் நிச்சயம் முடிந்த நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் திடீர் திருமணம் செய்துகொண்ட ஆர் கே சுரேஷ்.

0
6171
rk

சீரியல் நடிகையுடன் நிச்சயம் முடிந்த நிலையில் வேறு ஒரு பெண்ணை மனம் முடித்துள்ளார் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ். தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் என்று பலர் தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார்கள் அதேபோல ஒரு சில நடிகர்கள் தங்களது பலத்தை தாங்களே தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர் ஆனால் தயாரிப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் விடிவு சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை போன்ற படங்களை தயாரித்தவர் ஆர்கே சுரேஷ்.

சீரியல் நடிகை திவ்யாவுடன் ஆர் கே சுரேஷ்

தர்மதுரை படத்தில் இடம்பெற்ற மக்க கலங்குதப்பா என்ற பாடலிலும் தோன்றியிருந்தால் ஆர்கே சுரேஷ். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரா தப்பட்டை’ விஷால் நடிப்பில் வெளியான ‘மருது’ போன்ற படத்தில் வில்லனாக மிரட்டிய ஆர் கே சுரேஷ் கடந்த ஆண்டு வெளியான ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் ஆர் கே சுரேஷுக்கு சீரியல் நடிகை திவ்யா என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், திருமணம் நின்றுவிட்டதாக திவ்யா அறிவித்து இருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து திவ்யா கூறிய போது, அவர் மிகவும் நல்ல மனிதர். ஆனால் எங்களுக்குல் நிறைய விஷயங்கள் வேறுபடுகிறது. மேலும் கருத்து வேறுபாடுகளும் உள்ளது. இந்த கருத்துவேறுபாடுகள் பெரிதாகி திருமணம் முடிந்து பெரும் பிரச்சனை வர வேண்டாம் என எங்களுக்குள் நாங்களே பேசி முடிவு செய்தோம்.இதனால் தான் திருமண நிச்சயம் ஆன பின்பும் திருமணம் வேண்டாம் என பிரிந்துவிட்டோம் என கூறி இருந்தார் திவ்யா.

இப்படி ஒரு நிலையில் ஆர் கே சுரேஷ் வேறு ஒரு பெண்ணுடன் திடீர் திருமணம் நடத்தி இருக்கிறார். இந்த திருமணத்தில் 15 பேர் மட்டும் கலந்து கொண்டார்களாம். தனது திருமண புகைப்படத்தை பகிர்ந்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள அவர் ‘என்னுடைய வாழ்க்கையில் நடைபெற்றுள்ள சந்தோஷமான தருணத்தை உங்கள் அனைவரிடமும் மகிழ்ச்சியாக பகிர்கிறேன் எனக்கு திருமணம் முடிந்துவிட்டது உங்களின் அன்பு ஆதரவு வாழ்த்துக்களுக்கு நன்றி என்னுடைய தனி உரிமையை அனைவரும் மதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் ‘என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement