மாணவியின் கோரிக்கையை மேடையில் நிறைவேற்றிய விஜய்- சந்தோஷத்தில் கண்கலங்கிய மாணவி

0
2172
- Advertisement -

மாணவியின் கோரிக்கையை மேடையிலேயே விஜய் நிறைவேற்றி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு இருக்கும் விஷயம் விஜய் மாணவர்களுக்கு வழங்கிய விருது தான். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-

அதோடு 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றார்கள். இது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார். இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் விஜய் தன் ரசிகர்களை அடிக்கடி சந்தித்தும் வருகிறார். விஜயின் இந்த சந்திப்பு எல்லாம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம்:

அதோடு விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் தற்போது பத்து மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து அவர்களுக்கு கல்வி மாணவர்களை நடிகர் விஜய் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை இன்று நடிகர் விஜய் நேரில் சந்தித்து வழங்குகிறார்.

விஜய் வழங்கிய ஊக்க தொகை:

இந்த நிகழ்வு சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று இருக்கிறது. அதோடு இந்த நிகழ்ச்சியில் பொதுவெளியில் பேனர், கட்டவுட்டுகள் வைக்கக்கூடாது என்று ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் இருந்து வரக்கூடிய மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என ஐந்தாயிரம் பேருக்கு காலை மற்றும் மதிய உணவு பிரியாணி வழங்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டு மாணவர்களுடைய எதிர்காலம் குறித்தும், கல்வி குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்தார்.

-விளம்பரம்-

மேடையில் மாணவர்கள் செய்தது:

பின் விஜய் அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி அவர்களை கௌரவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் 600/600 மதிப்பெண் பெற்று தமிழகத்தில் முதல் இடம் பிடித்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு அவர் சால்வை அணிந்து வைர நெக்லஸை பரிசளித்திருக்கிறார். இதனை அடுத்து கிருஷ்ணகிரியை சேர்ந்த கீர்த்தி வர்மா என்ற மாற்றுத்திறனாளி மாணவர் தன்னுடைய காலால் வரைந்த விஜயின் புகைப்படத்தை அவருக்கு கொடுத்திருக்கிறார். இதனை அடுத்து மேடைக்கு வந்த மாணவர் ஒருவர் தற்காப்பு கலை பயிற்சி செய்து காண்பித்திருக்கிறார்.

மாணவி வைத்த கோரிக்கை:

இதை பார்த்த விஜய் ஆச்சரியப்பட்டு அவரை கட்டி அணைத்து பாராட்டி இருக்கிறார். இந்த நிலையில் பாட்டியுடன் சான்றிதழை வாங்க வந்த மாணவி ஒருவர் விஜய்க்கு கோரிக்கை வைத்திருக்கிறார். அதில் அவர், எல்லா மாணவர்களின் வெற்றிக்கு காரணமாக அவர்களது பெற்றோர்கள் இருப்பார்கள். ஆனால், என்னுடைய வெற்றிக்கு என்னுடைய பாட்டி தான் காரணம். அதனால் என் பாட்டிக்கு சால்வை அணிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட விஜய் உடனடியாக ஒரு சால்வையை அருகில் இருந்த பாட்டிக்கு அணிவித்து மாணவி உடைய கோரிக்கையை நிறைவேற்றி வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். தற்போது இந்த தகவல் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement