மேடையில் லட்சுமி ராயிடம் ரோபோ ஷங்கர் நடந்து கொண்ட விதமும் பேசிய விதமும் பலரை முகம் சுழிக்க வைத்துள்ளது.

0
18533
roboshankar
- Advertisement -

சிண்ட்ரெல்லா படத்தின் பிரெஸ் மீட்டில் நடிகை லட்சுமி ராயிடம் ரோபோ ஷங்கர் நடந்து கொண்ட விதமும் மேடையில் பேசிய விதமும் பலரை முகம் சுழிக்க வைத்துள்ளது. இப்படி ஒரு நிலையில் இவரின் பேச்சை கண்டித்து முகநூலில் பத்திரிகையாளர் மொஹமத் அமீரின் என்பவர் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாகவது ‘கல்யாண வீடுகளிலும், கோவில் திருவிழாக்களிலும் மேடை காமெடி செய்து வந்த ஷங்கர். ரோபோவாக நடித்து காமெடி செய்ததால் ரோபோ ஷங்கர் ஆனார்.

-விளம்பரம்-

சின்னத்திரை கொடுத்த வாய்ப்பால் சினிமா வாழ்க்கையை பெற்றார். இன்றைக்கு நாள் ஒன்றுக்கு லட்சக் கணக்கில் சம்பளம் பெறும் நடிகராக வளர்ந்து விட்டதால் தோற்றத்தில் இருந்த ரோபோத்தனம் மனதுக்குள்ளும் வந்து விட்டது. சமீபகாலமாக அவரது மேடை நாகரீக அத்துமீறல்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதற்கு மிக சமீபத்திய உதாரணம் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் புரமோசன் நிகழ்ச்சி. அந்த படத்தின் நாயகி ராய் லட்சுமி வழக்கம்போல தொடை தெரியும் கவர்ச்சி உடை அணிந்து வந்தார்.

இதையும் பாருங்க : கணவர் மற்றும் குழந்தைகளோடு கடற்கரையில் நீச்சல் உடையில் கும்மாளம் போட்ட சமீரா ரெட்டி

- Advertisement -

அவர் அருகில் இருந்து கொண்டு ரோபோ செய்த சிஷ்மிஷங்கள் அற்பத்தனமானவை. அறுவெறுப்பானவை. ரோபோ சங்கர் பேச எழுந்து சென்றபோது ராய் லட்சுமியின் உடையை எடுத்து அவர் தொடையை மறைத்தார். “நான் மட்டுந்தான் பார்க்கணும்” என்று அதற்கு கமெண்டும் அடித்தார். ராய் லட்சுமி பேச எழுந்தபோது அவரது கையை பிடித்து இழுத்து “எங்கடா போற” என்று வழிந்தார். விடு என்னை என்று சொல்லி அவரிடமிருந்து கையை வலுக்கட்டாயமாக பிடுங்கி சென்றார் ராய் லட்சுமி.

ரோபோ சங்கர் பேசும்போது “ராய் லட்சுமி மெழுகு சிலை மாதிரி இருக்கிறார். அவர் எப்படி இருக்காங்க பாருங்களேன்” என்று வழிந்தோடும் ஜொள்ளுக்கு இடையே பேசினார். படத்தில் வரும் காமெடி காட்சியில் அவர் தனக்கு அதிக சுதந்திரம் கொடுத்ததாகவும். அதனால் அந்த காட்சியை தான் இம்பூரவைஸ் (மேம்படுத்தல்) செய்தாகவும் கூறினார்.அந்த படத்தில் அவர் ஒரு டெய்லர். அவர் கடைக்கு அப்பாவி வேலைக்கார பெண்ணான ராய் லட்சுமி உடை தைக்க வருகிறார்.

-விளம்பரம்-

அவரை பார்த்து அவர் வழிந்து உதிர்க்கிற சொற்கள் டபுள் மீனிங்கெல்லாம் இல்லை சிங்கிள் மீனிங்தான்.காலை தூக்கி காட்டு, உன்னை வச்சி செஞ்சி அனுப்புறேன். உன்னை அனு அனுவா அளக்கணும்போல இருக்கு இப்படியான வசனங்கள் அந்த காட்சிகளை பார்க்கவும், கூசவும் வைக்கிறது.ரோபோ சங்கர் போன்றவர்களுக்கு நடிகைகள் என்றால் அவர்கள் ‘படுக்கைப் பொருள்’ என்ற மனநிலை இருப்பதையே இது காட்டுகிறது.

நடிப்பு என்பது ஒரு தொழில், அதில் ஆண்கள் போன்றே பெண்களும் பணியாற்றுகிறார்கள். அதென்ன சினிமாவில் மட்டும் பெண்கள் படுக்கைப் பொருளாகவும், போகப் பொருளாகவும், பாலியல் வடிகால்களாகவும் பார்க்கப்படுகிறார்கள். அதுவும் சினிமா போடும் சோற்றை தின்று கொண்டே ரோபோ சங்கர் போன்றவர்கள் நடந்து கொள்வது எந்த மாதிரியான மனநிலை. ரோபோவுக்குதான் மூளை கிடையாது. ரோபோ என்று பெயர் வைத்துக் கொண்டாலுமா

Advertisement