குடும்பத்தோடு ஜிம்மில் முகாம் போட்ட இருக்கும் ரோபோ சங்கர் – இதான் காரணமா ? வைரலாகும் வீடியோ

0
1482
Roboshankar
- Advertisement -

குடும்பத்தோடு ஜிம்மில் ரோபோ சங்கர் குடியேறிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். இவர் குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். ஆனால், கடந்த ஆண்டு இவர் உடல் எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி போய் இருக்கிறார்.

-விளம்பரம்-

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ரோபோ ஷங்கர் ஏன் இப்படி ஒல்லியாக மாறிவிட்டார்? அவருக்கு ஏதாவது பிரச்சனையா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள். பின் இது குறித்து ரோபோ சங்கர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் விளக்கம் கொடுத்து பேட்டி அளித்து இருந்தார்கள். தற்போது ரோபோ சங்கர் உடல் நலம் தேறி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் அவரது மனைவியான பிரியங்காவும் முன்பை விட உடல் மெலிந்து காணப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

ரோபோ சங்கர் மனைவி:

இதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி ரோபோ சங்கரை போல பிரியங்காவிற்கும் ஏதாவது உடலில் பிரச்சனையா? என்று கேள்வி எழுப்ப வந்தனர். அதற்கு விளக்கம் பிரியங்கா கொடுத்து இருந்தார். அதில் அவர், இப்போது நான் 30 கிலோ வரை உடல் எடையை குறைத்து இருக்கிறேன். நான் டயட் மூலமாகத்தான் இந்த உடல் எடையை குறைத்தேன். என் உடலுக்கு டீடாக்ஸ் பானம் ரொம்ப ரொம்ப அவசியம் என்பதால் வெந்நீரில் பட்டையை ஊறவைத்து குடித்தேன். இது தவிர ஒர்கவுட், யோகா, வாக்கிங் எல்லாம் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் செய்தேன் என்று கூறுகிறார்.

இந்திரஜா குறித்த தகவல்:

இவர்களைத் தொடர்ந்து இவருடைய மகள் இந்திரஜா சங்கரும் சமீப காலமாக உடல் எடையை குறைப்பதற்கு ஜிம்முக்கு சென்று கொண்டிருக்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகியிருந்தது. இந்திரஜா விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு கார்த்தி- அதிதி சங்கர் நடிப்பில் வெளிவந்த விருமன் படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர் படங்களையும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவருடைய முறைமாமன் கார்த்திக் என்பவரையே திருமணம் செய்து கொள்கிறார்.

-விளம்பரம்-

ரோபோ சங்கர் குடும்பம்:

இது தொடர்பாக கூட பேட்டியில் ரோபோ சங்கரின் மனைவி கூறியிருந்தார். இந்த நிலையில் ரோபோ ஷங்கர் உடைய மொத்த குடும்பமும் ஜிம்மில் முகாமிட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ரோபோ சங்கர் உடைய மனைவி பிரியங்கா, அவருடைய மகள் இந்திரஜா, அவருடைய மருமகன் கார்த்தி என ஒட்டுமொத்த குடும்பமும் ஜிம்மில் சென்று உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அனைவரும் உடல் எடையை குறைக்க தீவிரமாக பயிற்சி செய்கிறார்கள்.

இந்திரஜா பதிவு:

இது தொடர்பாக இந்திரஜா தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், துணிந்தவன் முன் வந்தால் விதிகளை மதி வெல்லும். ஒட்டுமொத்த குடும்பத்தினரும் ஜிம்மில் இருக்கும் போது எங்களை ட்ரெயின் பண்ற கஷ்டம் ஜிம் மாஸ்டருக்கு மட்டும் தான் தெரியும் என்று கூறி ஜிம்மில் அனைவரும் மேற்கொள்ளும் பயிற்சி வீடியோக்களையும் பகிர்ந்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பலரும் ரோபோ சங்கருக்கு வாழ்த்தும், பாசிட்டிவான கமெண்ட்களையும் போட்டு வீடியோவுக்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

Advertisement