உடல் நிலை சரியில்லாமல் போனதால் தான் மகளுக்கு அவசர திருமணமா ? முதன் முறையாக மனம் திறந்த ரோபோ ஷங்கர்.

0
1734
Roboshankar
- Advertisement -

தனது மகளின் திருமணம் குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார் ரோபோ ஷங்கர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர், நடிகைகள் சென்று இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர்.

-விளம்பரம்-

2002 ஆம் ஆண்டு நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இந்திரஜா என்ற மகளும் இருக்கிறார். இவர் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து கார்த்தி நடித்த விருமன் படத்திலும் நடித்து இருந்தார். அதே போல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டார்.

- Advertisement -

சமீபத்தில் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா தனது மாமானுடன் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்து ரசிகர் அவர் உங்களது முறை மாமனா? அவரை தான் நீங்கள் திருமணம் செய்ய போகிறீர்களா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு இந்திரஜா, ஆமாம். திருமணம் குறித்து விரைவில் தகவல் வரும் என்று கூறி இருந்தார். இதனை தொடர்ந்து ரோபோ ஷங்கருக்கு உடல் நிலை சரி இல்லாததால் தான் மகளுக்கு விரைவில் திருமணம் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் என்று செய்திகள் பரவியது.

வீடியோவில் 33 : 18 நிமிடத்தில் பார்க்கவும் :

இப்படி ஒரு நிலையில் தனது மகளின் திருமணம் குறித்து பேசிய ரோபோசங்கர் ‘எங்கள் மகளுக்கு திருமணம் நடைபெறப்போவது உண்மைதான் அதற்கான தேதியை விரைவில் நாங்கள் அறிவிப்போம் நாட்டில் எத்தனையோ பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெறுகிறது. ஆனால், பிரபலம் என்பதால் எங்களின் மகளின் திருமண விஷயம் எப்படி பேசுபொருள் ஆகிவிட்டது இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் ரோபோ சங்கர் தன்னுடைய மகளுக்காக மூன்று கோடி ரூபாயில் கார் வாங்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

பல கோடிகளில் நகைகளை வாங்கி வீட்டில் வைத்திருக்கிறார். உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் இறப்பதற்குள் தன்னுடைய மகளுக்கு திருமணம் முடித்து பார்க்க ஆசைப்படுகிறார் என்றெல்லாம் கிளப்பி விட்டார்கள்’ என்று வேடிக்கையாக கூறி இருக்கிறார். மேலும், ரோபோ ஷங்கர் மகள் திருமணம் செய்ய இருக்கும் நபரின் கார்த்தி. இவர் ‘தொடர்வோம்’ என்கிற தன்னார்வல அறக்கட்டளையை நிறுவி பல குழந்தைகளை வளர்த்து வருகிறார்.

அவருடைய பூர்வீகம் மதுரைதான். ரோபோ சங்கரும் மதுரையைச் சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். இருவரும் உறவினர்கள் என்பதால் இது நிச்சயம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருக்கலாம் என்கிற கருத்தும் பரவி வருகிறது. கார்த்திக்கிற்கு இயக்குநர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசையாம். அதனால் இவரும் ஒரு வகையில் திரைத்துறையைச் சேர்ந்தவர்தான். இந்திரஜாவும் தொடர்ந்து நடிப்பிலும், படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement