பிகில் பெண்களுடன் குத்தாட்டம் போட்ட மகள். வீடீயோவை பகிர்ந்த ரோபோ சங்கர்.

0
28194
Robo-Shankar
- Advertisement -

தொலைக்காட்சியில் மேடை கலைஞராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி காமெடி நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் ரோபோ சங்கர். ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோபோ ஷங்கர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார். அதன் பின்னர் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர் பின்னர் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். இந்த நிலையில் இவரது மகளும் பிகில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். முதல் படம் என்பதால் இவருக்கு முதல் படத்திலேயே பெரும் பிரபலம் கிடைத்திருக்கிறது.

-விளம்பரம்-
Robo-sankar-daughter

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. வெளியான 5 நாட்களிலேயே 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக இந்த படம் வெற்றியை கண்டுள்ளது. நயன்தாரா விவேக் யோகிபாபு டேனியல் பாலாஜி கதிர் இந்துஜா என்று பல்வேறு முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தில் ஒரு சில புதுமுக நடிகைகளின் அறிமுகமாகி இருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : பிரபல நடிகை மைனாவிற்கு இரண்டாம் திருமணம். சீரியல் நடிகருடன் நிச்சயதார்த்தம் முடிந்தது.

- Advertisement -

பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் ரெபா மோனிகா இந்துஜா ரோபோ ஷங்கரின் மகள் என்று பல்வேறு நபர்கள் நடித்துள்ளனர். இந்த அணியில் தனது தந்தையைப் போல மிகவும் நகைச்சுவையான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரோபோ ஷங்கரின் மகள். இந்த படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரோபோ சங்கரின் மகள், கிளைமாக்ஸ் காட்சியில் வரும் காட்சி ஒன்றில் அனைவரையும் வியக்க வைத்தார்.

ரோபோ ஷங்கரின் மகனுக்கு பிகில் படத்தில் வாய்ப்பு கிடைத்தது tik.tok மூலமாகத்தான். ரோபோ ஷங்கரின் மகள் தனது தந்தையுடன் tik.tok வீடியோக்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வந்தார். மேலும், இவர் பதிவிடும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அப்படி, இவரது டிக் டாக் வீடியோவை பார்த்துள்ள அட்லி பின்னர் இவருக்கு பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் நடிகை இந்திரஜா படத்தில் நடித்த பெண்களுடன் குத்துப்பாடலுக்கு செமையான ஒரு குத்து டான்ஸ் ஒன்றை போட்டுள்ளார். இந்த வீடியோவை ரோஜா ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

-விளம்பரம்-

சமீபத்தில் இந்த படத்தில் தனது மகளைக் கண்டு கண்கலங்கிய தாக பிரபல காமெடி நடிகரான ரோபோ ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூட பதிவிட்டிருந்தார். அதில், பிகில் ட்ரைலரில் என்னுடைய மகளை பார்த்து கண்ணில் கண்ணீர் வழிந்தது. என் மகளுக்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்தற்கு விஜய் சாருக்கு அட்லீ சாருக்கும் மனமார்ந்த நன்றிகள். ட்ரைலர் மிகவும் அற்புதமாக இருக்கிறது என்று பதிவிட்டிருந்தார் ரோபோ ஷங்கர். செல்லபோனால் பிகில் படத்திற்கு பின்னர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கு பல்வேறு ரசிகர்கள் உருவாகியுள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement