தலைவா நாம் பயந்து ஒதுங்குகிறோமா இல்லை பாயப்பதங்குகிறோமா – ரசிகரின் கேள்விக்கு விஜய் அளித்த பதில் தற்போது வைரல்.

0
2024
- Advertisement -

சோசியல் மீடியா முழுவதும் தற்போது லியோ படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தடை குறித்து தான் பேசப்பட்டு வருகிறது. அதற்கு பதிலளிக்கும் வகையில் விஜயின் பழைய டிவிட்டை தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. அந்த படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சி தடை குறித்து தான் தற்போது பேசபட்டு வருகிறது.

-விளம்பரம்-

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இன்று நடிகர் அர்ஜுனன் பிறந்தநாள்.

- Advertisement -

இதனால் லியோ தயாரிப்பு நிறுவனம் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டு இருக்கிறது. அதில் படத்தில் அர்ஜுன் நடித்திருக்கிற ஹரோல்ட் தாஸ் என்ற கதாபாத்திர பெயரையும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். தற்போது லியோ படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சி தடைக்கு திமுக அரசு தான் காரணம் உதயநிதி தான் காரணம் என்றும் பலரும் கூறி வந்தனர் அந்த நிலையில் தான் பழைய டிவீட் ஒன்று வைரலாகி வருகிறது.

ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள்

இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி தடை அளித்ததற்கு பலரும் எக்ஸ் தளத்தில் விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ஆனது 30 ஆம் தேதி நடைபெற இருந்தது இதற்காக சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு வந்தனர் அந்த நிலையில் தயாரிப்பாளர் தரப்பில் இசை வெளியீட்டு விழாவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

-விளம்பரம்-

இது பெரும் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் பலரும் விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில் #WestandwithLeo என் ஹஷ்டக் விஜய் ரசிகர்கள் பரப்பி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கத்தி படத்தின் போது சில பிரச்சனைகள் ஏற்பட்டது. அப்போது விஜய் இடம் ஒரு ரசிகர் “தலைவா நாம் பயந்து ஒதுங்குகிறோமா இல்லை பாயப்பதங்குகிறோமா” என்ற ட்விட்டரில் கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்த விஜய் “பயமும் இல்லை பதுங்கவும் இல்லை அனுபவம் தேடுகிறோம்” என்று பதில் அளித்து இருந்தார். அது தற்போது வைரலாகி வருகிறது. பொதுவாக விஜய் படங்கள் வெளியாகும் போது அதற்கு பிரச்சனைகள் ஏற்படுவது வாடிக்கையான ஒரு விஷயம் தான். லியோ படத்தின் முதல் பாடலான நான் ரெடி பாடல் வெளியான போதே அந்த பாடலில் புகையிலை, கிக்கு போன்ற வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement